டெல் அவிவ்: காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான் வழித்தாக்குதல்களை நடத்தி உள்ளது. நேற்று அதிகாலை காஸாவில் குண்டுவெடிப்பு
சத்தங்கள் கேட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. இதை இஸ்ரேல் ராணுவமும் உறுதி செய்தது.
ஆனால் காஸாவிலிருந்து பல பலூன்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டதால் பல தீ விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் அதற்குப் பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டதாக காஸாவின் ஹமாஸ் போராளிகள் தெரிவித்தனர்.
இருதரப்பிற்கும் இடையே
11 நாட்களாக நீடித்த சண்டை கடந்த மே 21 ஆம் தேதி
முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பிறகு, தற்போது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கி
உள்ளன.

