நியூயார்க்: கொரோனா கிருமிப் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிஃபோர்னியா மாநிலங்களில் கிட்டத்தட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளதாக அம்மாநில ஆளுநர்கள் அறிவித்துள்ளனர்.
இரு மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதைத் தொடர்ந்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
நியூயார்க்கில் சுமார் 70%, கலிஃபோர்னியாவில் சுமார் 72 விழுக்காட்டு பெரியவர்களும் குறைந்தது ஒருமுறையாவது தடுப்பூசி
போட்டுக் கொண்டுள்ளனர்.
தளர்வுகளைத் தொடர்ந்து இவ்விரு மாநிலங்களிலும் உணவக மேசைகளுக்கு இடையில் 6 அடி இடைவெளி இனி தேவையில்லை; திரையரங்குகள் முழு அளவில் இயங்கலாம்; வர்த்தக கட்டடங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமல்ல.
"இதுவொரு முக்கியமான நாள். மிக நீண்ட நாட்களாக நாங்கள் கட்டுப்பாடுகளோடு இருக்கிறோம்," என்றார் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ குமோ.
கலிஃபோர்னியாவிலும் இதே போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கிருமித்தொற்றுக்கு மாண்டோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் 600,000 எட்டியது குறிப்பிடத்தக்கது.

