ரியோ டி ஜெனிரோ: கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டி ஒன்றின் பிற்பாதி ஆட்டத்தில் மீண்டெழுந்த
பராகுவே 3-1 என்ற கோல்கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது.
1963ஆம் ஆண்டிற்குப் பிறகு கோப்பா அமெரிக்கா தொடரில், பொலிவியாவால் தற்போது வரை பராகுவேவை வீழ்த்த முடியவில்லை.
ஆனால் நேற்றைய ஆட்டத்தின் முற்பாதியில் பெனால்டி வாய்ப்பை பொலிவியா கோலாக்கியபோது, எங்கே இம்முறை பராகுவேயை வீழ்த்திவிடுமோ என்று தோன்றியது.
ஆனால் பொலிவிய வீரர் ஜாம் கியூலர் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டபோது, ஆட்டம் பராகுவேவிற்கு சாதகமாகத் திரும்பத் தொடங்கி
யது.
அதன் பிறகு பிற்பாதி ஆட்டத்தில் காகு போட்ட ஒரு கோலைத் தொடர்ந்து ரோமேரோவும் இரட்டை கோல்கள் போட, இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் பொலிவியாவை மீண்டும் வீழ்த்தியது பராகுவே.

