யூரோ கிண்ண காற்­பந்­தில் அதிக கோல்­கள் போட்டு போர்ச்­சு­க­லின் ரொனால்டோ சாதனை

புடா­பெஸ்ட்: யூரோ கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் அதிக கோல்­க­ளைப் போட்ட வீரர் என்ற பெரு­மையைத் தட்­டிச் சென்­றுள்­ளார் போர்ச்­சு­க­லின் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ.

செவ்­வாய்க்­கி­ழமை நள்­ளி­ரவு ஹங்­கே­ரிய தலை­ந­கர் புடா­பெஸ்ட்­டின் புஸ்­காஸ் அரினா மைதா­னத்­தில் அந்­நாட்டை எதிர்­கொண்ட ரொனால்­டோ­வின் போர்ச்­சு­கல் அவ­ரு­டைய இரு கோல்­க­ளை­யும் சேர்த்து மேலும் ஒரு கோல் போட்டு 3-0 என்ற கோல் எண்­ணிக்­கை­யில் ஹங்­கே­ரியை வீழ்த்­தி­யது.

போர்ச்­சு­க­லின் முதல் கோலை ஆட்­டத்­தின் 84ஆம் நிமி­டத்­தில் குரேரோ என்­ப­வர் போட அடுத்த மூன்­றா­வது நிமி­டத்­தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கோலாக்­கி­னார் ரொனால்டோ.

இதன்­மூ­லம் அவர் யூரோ கிண்­ணப் போட்­டி­களில் தனது பத்­தா­வது கோலைப் போட்டு, அது­வரை இந்த போட்­டி­யில் ஒன்­பது கோல் போட்டு, அதிக கோல்­கள் போட்­ட­வர் என்ற பெரு­மை­யைப் பெற்ற பிரான்ஸ் நாட்­டின் மிச்­செல் பிளேட்­டி­னி­யின் சாத­னையை பின்­னுக்­குத் தள்­ளி­னார்.

இது போதாது என்று ஆட்­டத்­தின் கூடு­தல் நேரத்­தில் ஹங்­கே­ரி­யின் கோல்­காப்­பா­ள­ருக்கு போக்கு காட்டி அவ­ரைத் தாண்­டிச் சென்று தமது 2வது கோலை ஹங்­கே­ரிக்கு எதி­ரா­கப் போட்­டார்.

"ரொனால்டோ மற்ற வீரர்

களுக்கு முன்­மா­தி­ரி­யாக விளங்­கும் வீரர், அவர் தமது குழு­வுக்கு ஊக்­கம் கொடுத்து செயல்­பட வைப்­ப­வர்.

"முதல் பாதி ஆட்­டத்­தில் அவர் கிடைத்த ஒரு வாய்ப்பை வீண­டித்­த­போ­தும் அவரை வெகு­நே­ரம் கோல் போட விடா­மல் தடுக்க முடி­யாது.

"அவர் எப்­பொ­ழு­தும் தான் விளை­யா­டும் ஆட்­டங்­க­ளின் போக்கை நிர்­ண­யிப்­ப­வர்.

"அவர் பெனால்டி வாய்ப்பை எடுக்­கும்­போதே கோல் போடு­வார் என்­பது நமக்­குத் தெரி­யும். அவர் புதிய சாத­னை­களை உரு­வாக்­கு­ப­வர்.

"இந்த வய­தி­லும் அவ­ரால் இப்­படி முனைப்­பு­டன் விளை­யாட முடி­கிறது என்­றால் அது உண்­மை­யி­லேயே சிறப்­பான ஒன்று. அவர் தண்­ணீ­ரின் மேல் நடப்­ப­து­போல் இருக்­கிறது," என்று முன்­னாள் இங்­கி­லாந்து தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் கிறிஸ் சட்­டன் ஈடு இணை­யில்லா புக­ழா­ரம் சூட்­டி­னார்.

மற்­றொரு போட்­டி­யில் சொந்த கோலால் ஃபிரான்­சி­டம் ஜெர்­மனி 1-0 என்ற கோல்­க­ணக்­கில் தோற்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!