தைப்பே: தங்கள் நாட்டை நோக்கி சீனா செவ்வாய்க்கிழமை 28 போர் விமானங்களை அனுப்பியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுமுதல் சீனா அடிக்கடி போர் விமானங்களை அனுப்பிவரும் நிலையில் மிக அதிக எண்ணிக்கையிலான விமானங்களை முதல்முறையாக இப்போது அனுப்பியுள்ளது.
பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், தைவான் நீரிணை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீா்வுகாண வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் சீனா இவ்வாறு செய்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் சாவோ லிஜியன் கூறுகையில், "ஜி7 நாடுகள் வேண்டுமென்றே சீன உள் விவகாரங்களில் தலையிடுகின்றன.
"தேசிய இறையாண்மை, மேம்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக உள்ளது," என்றாா்.

