செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

2 mins read
c2f3dfdb-936b-42df-b151-f6ec2b418f23
-

விதிகளைத் தளர்த்தும் மெல்பர்ன்

சிட்னி: மெல்­பர்ன் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த கடு­மை­யா­கப் போராடி வரும் வேளை­யில், நாளை முதல் வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளின்­போது முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம்­இல்லை என்­ப­தோடு 25 கி.மீ. தூரம் என்ற கட்­டுப்பாடு

இல்­லா­மல் மக்­கள் எங்கு வேண்­டு­மா­னா­லும் செல்­ல­லாம் என்­பது உள்­ளிட்ட தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த மே மாதம் 24ஆம் தேதி கிரு­மித்­தொற்று குழு­மம் அடை­யா­ளம் காணப்­பட்­ட­தைத் தொடர்ந்து, இரண்டு வாரம் முடங்­கிய மெல்­பர்­னில் சென்ற வார இறுதி முதல் கட்­டுப்

பாடு­கள் தளர்த்­தப்­பட்டு வரு­கின்­றன.

மாணவி காணா­மற்­போன

வழக்­கில் மலே­சியா புதிய தீர்ப்பு

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் காட்­டில் காணா­மற்­போன பிரெஞ்சு-ஐரிஷ் பள்ளி மாண­வி­யின் மர­ணம் 'தற்­செ­யலா

னது' என்ற முந்­தைய தீர்ப்பை நேற்று ரத்து செய்த மலே­சிய நீதி­மன்­றம், அதற்­குப் பதி­லாக 'முடி­வுக்கு வர முடி­ய­வில்லை' என்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது. புதிய தீர்ப்­பின்­படி குற்றச் செய­லுக்கு வாய்ப்பு இருக்­கக்­கூ­டும் என்­ப­தால், அது புதி­தாக மீண்­டும் விசா­ர­ணையை மேற்­கொள்­வதற்கு அதி­கா­ரி­

க­ளுக்கு அழுத்­தம் கொடுக்­கக்­கூ­டும் என்று கூறப்படுகிறது.

கற்­றல் குறை­பாடு உடைய, 15 வயது நோரா குய்­ரின் 2019ல் கோலா­லம்­பூர் புற­ந­கர் ரிசார்ட்­டில் இருந்து காணா­மல் போனார். பெரும் தேடு­தல் வேட்­டைக்­குப் பிறகு அவ­ரது

சட­லம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

'உரு­மா­றிய தொற்று பர­வும் ஆபத்து'

பேங்­காக்: தாய்­லாந்­தின் சுற்­று­லாத் தல­மான புக்­கிட்­டிற்கு இவ்­வ­ளவு விரை­வாக மீண்­டும் சுற்­று­லாப் பய­ணி­களை அனு­ம­தித்­தால், அம்­மா­நி­லத்­தில் உரு­மா­றிய கிரு­மித்­தொற்று பர­வு­வ­தற்­கான ஆபத்து உள்­ள­தாக அந்­நாட்­டின் மகி­டோல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பேரா­சி­ரி­ய­ரான மருத்­து­வர் ஒரு­வர் கூறி­யி­ருக்­கி­றார். உள்­ளூர் மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­

பட்­டி­ருந்­தா­லும், அது உரு­மா­றிய கிரு­மித்­தொற்­றில் இருந்து பாது­காக்­காது என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

வரும் ஜூலை முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்­டுப் பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­தல் இல்­லா­மல் புக்­கிட்­டிற்கு நேர­டி­யாக சுற்­றுலா செல்ல அந்­நாடு அனு­மதி

அளித்­துள்­ள­தை­ய­டுத்து அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

'வைரக்­கல்' என்று குவிந்த மக்­கள்

குவா­ஹ­லதி: ஆப்­பி­ரிக்­கா­வின் ஜோகன்­னஸ்­பர்க்­கி­லி­ருந்து தென்­கி­ழக்­கில் 300 கி.மீ. தொலை­வில் உள்ள குவா­ஹ­லதி கிரா­மத்­தில் கால்­நடை வளர்ப்­ப­வர் ஒரு­வர் படி­கம் போன்ற பள­ப­ளக்­கும் கற்­க­ளைக் கண்­டு­பி­டித்­தார். அதைத் தொடர்ந்து அது வைர­மாக இருக்­கக்­கூ­டும் என்று நம்பி

மக்­கள் பல­ரும் அங்கு திரண்­ட­னர்.

அது மதிப்­பற்ற கற்­க­ளாக இருக்­கக்­கூ­டும் என்ற அர­சாங்­கத்­தின் எச்­ச­ரிக்­கையை அவர்­கள் பொருட்­ப­டுத்­த­வில்லை. மண்­வா­ரி­யா­லும் வெறும் கைக­ளா­லும் மண்­ணைத் தோண்டி கற்­க­ளைக் கைப்­பற்­றிய சிலர் அதைப் பாது­காப்­பா­க­வும் வைத்­துள்­ள­னர். இதற்­கி­டையே, கற்­கள் குறித்து ஆய்வு செய்­வ­தற்­காக புவி­யி­யல், சுரங்க வல்­லு­நர்­கள் குழுவை

அர­சாங்­கம் அங்கு அனுப்­பி­யுள்­ளது.