இரு வேறு கொவிட்-19 தடுப்பூசிகளை போடும் முறையை மலேசியா பரிசீலனை

இரு வேறு கொவிட்-19 தடுப்பூசிகளை போடும் முறையை மலேசியா பரிசீலனை

1 mins read
eb99b250-2535-4950-82b8-ccc867ef5b15
-

கோலா­லம்­பூர்: கொவிட்-19 உரு­மா­றிய கிரு­மி­க­ளுக்கு எதி­ரான செயல்­தி­றனை அதி­க­ரிக்க இரு வெவ்­வேறு தடுப்­பூசி மருந்­து­களைப் போடுவது குறித்து மலே­சியா பரி­சீ­லித்து வரு­கிறது.

அறி­வி­யல் அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் நேற்று பயி­ல­ரங்கு ஒன்­றில் இதனை தெரி­வித்­தார்.

நாட்­டில் கிரு­மித்­தொற்று தொடர்­ க­தை­யாக நீண்ட நாட்­க­ளுக்கு இருக்­கும் என்று அமைச்­சர் கைரி நம்புகிறார். இதனால் மலே­சியா ஒட்­டு ெமாத்த எதிர்ப்பு சக்­தியைப் பெற்றுவிடும் என்ற கண்ணோட் டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

முதல்­முறை ஆஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூ­சி­யை­யும் இரண்­டா­வது முறை ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூ­சி­யை­யும் போடும் கலப்பு தடுப்பூசி முறையை அதி­கா­ரி­கள் பரி­சீலித்து வரு­கின்­ற­னர்.

இதற்­காக ஜெர்­ம­னி­யின் தர­வு­கள் ஆரா­யப்­ப­டு­கின்­றன. இப்­படி தடுப்­பூ­சி­களைக் கலந்து போடு­வ­தால் வெவ்­வேறு உரு­மா­றிய கிரு­மி­களுக்கு எதிரான செயல்திறன் அதிகரிக்கும் என்று திரு கைரி குறிப்­பிட்­டார்.

இதற்கிடையே செப்டம்பரில் நாடாளுமன்றத்தைக் கூட்ட அர சாங்கம் திட்டமிட்டுள்ளதாக சபா நாயகர் அஸார் அஸிஸான் ஹாருன் தெரிவித்தார்.

கொவிட்-19 நெருக்கடியில் அதுவே விவேகமான முடிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று மாமன்னர் பரிந்துரை செய்துள்ள வேளையில் சபாநாயகரின் கருத்து வெளியாகி யுள்ளது.

கடைசியாக 2020 டிசம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றக்கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த ஜனவரியிலிருந்து நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவில்லை.