50% தொற்று அதிகரிப்புக்கு டெல்டா காரணம்

லண்­டன்: இங்­கி­லாந்­தில் கடந்த மே மாதத்­தி­லி­ருந்து ­தொற்றுச் சம்பவங்கள் 50 விழுக்­காடு அதி­க­ரித்­த­தற்கு அதி­வே­கத்­தில் பர­வும் தன்மை கொண்ட டெல்டா கிரு­மியே கார­ணம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்­டுப்­பா­டு ­க­ளைத் தளர்த்­தும் திட்­டத்­தை பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் ஒத்­தி­வைத்­தார்.

பிர­த­ம­ரின் முடி­வுக்கு தர­வு­கள் ஆதா­ர­மாக இருந்­த­தாக அர­சாங்­கம் தெரி­வித்­தது.

இம்­மா­தம் 19ஆம் தேதி கட்­டுப்­பா­டு­களை முழு­மை­யாக அகற்ற திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் இந்­தி­யா­வில் முதல் முறை­யாக அடை­யா­ளம் காணப்­பட்ட உரு­மா­றிய டெல்டா கிருமி மிரட்டலாக விளங்கியது. இதை ­ய­டுத்து அதி­க­மா­னோ­ருக்கு தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­கள் முடுக்கி­வி­டப்­பட்­டன.

ரியாக்ட்-1 எனும் இம்ப்­பீ­ரி­யல் காலேஜ் ஆஃப் லண்­டனின் கிரு­மிப் பர­வல் ஆய்வு மே 20ஆம் தேதிக்­கும் ஜூன் 7ஆம் தேதிக்­கும் இடையே மேற்­கொள்­ளப்­பட்­டது.

அதில் கிரு­மித்­தொற்று படிப்­படி­யாக அதி­க­ரித்து வரு­வது கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டது.

"இளை­யர்­க­ளி­டையே தொற்று வேகமாகப் பர­வி­யது. ஒவ்­வொரு 11 நாட்­க­ளுக்கும் இரண்டு மடங்கு தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தன. இது­வொரு கெட்ட செய்தி என்­பது தெளி­வாகத் தெரிந்­தது," என்று இம்ப்­பீ­ரி­யல் காலேஜ் ஆஃப் லண்­ட­னின் பேரா­சி­ரி­யர் டாக்­டர் ஸ்டீ­வன் ரிலே சொன்­னார்.

பெரிய அள­வில் நடத்­தப்­பட்­ட ஆய்வில் சுமார் 109,000 தொண்­டூ­ழி­யர்­கள் பங்­கேற்­ற­னர்.

இளம் வய­தி­ன­ரி­டம் தடுப்­பூசி போடும் பணிகளைத் துரி­தப்­ப­டுத்­தி­னால் கிரு­மித்­தொற்றைக் கட்­டுக்­குள் கொண்டு வர முடி­யும் என்­று டாக்­டர் ரிலே கூறி­னார்.

பிரிட்­ட­னில் 50 விழுக்­காடு மக்­கள் தொகைக்கு மேல் இரண்டு முறை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் கிருமித்தொற்றின் பாதிப்பு மிதமாக இருக்கும்.

ஆனால் டெல்டா கிருமி தடுப்பூசி ஆற்றலைக் குறைத்துவிடு கிறது. இருந்தாலும் இரண்டு முறை தடுப்­பூசி போ­டுவதால் கடு­மை­யான பாதிப்பை தடுக்க முடியும் என்பதை முந்தைய ஆய்வுகள் தெரிவிக் கின்றன.

இதனை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக், ஆய்வின் முடிவால் கடைசிக்கட்ட தளர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்றார்.

அனைவருக்கும் தடுப்பூசி போடும் வரை இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!