ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகச் செயல்படும் ஆப்பிள் டெய்லி அலுவலகத்தில் நுழைந்த 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் செய்தியாளர்களின் கணினிகளைக் கைப்பற்றினர்.
அவர்களுடைய கட்டுரைகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறும் வகையில் இருக்கின்றன என்று அதிகாரிகள் கூறினர். ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் ஐந்து நிர்வாகிகளும் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். கைது ஆணையுடன் உள்ளே நுழைந்த அதிகாரிகள், செய்தியாளர்களின் நாற்காலிகளில் உட்கார்ந்து கணினிகளைச் சோதனையிட்டனர். செய்தியாளர் களின் கைபேசி, மடிகணினி உட்பட அவர்களின் பொருட்கள் கைப் பற்றப்பட்டன. அண்மையில் இந்தப் பத்திரிகையின் உரிமையாளரும் தொழிலதிபருமான ஜிம்மி லாய் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சொத்துகளும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப் பட்டன. இதையடுத்து அவரது அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. ஹாங்காங் கில் ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர்ந்து நசுக்கப்படுகின்றனர்.

