ரோம்: இத்தாலியின் ராபர்ட்டோ மன்சினி நிர்வாகத்தின்கீழ் விளையாடும் இத்தாலியக் காற்பந்துக் குழு 'யூரோ 2020' போட்டியில் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது.
இதன்மூலம் அவர்கள் மற்ற குழுக்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
நேற்று அதிகாலை சிங்கப்பூர் நேரப்படி 3.00 மணிக்கு சுவிட்சர்லாந்தை எதிர்கொண்ட இத்தாலி, வெற்றி பெறத் தேவையான எந்த உத்தியையும் விட்டு ைவக்கவில்லை.
மானுவெல் லொக்கடெல்லி இரு கோல்களைப் போட பின்னர் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சிரோ இம்மமோபைல் ஒரு கோலைப் போட்டு சுவிட்சர்லாந்தை 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் இத்தாலி வெல்ல, ரோம் நகரின் ஒலிம்பிக்கோ மைதானத்தில் குழுமியிருந்த இத்தாலிய ரசிகர்களிடம் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது.
யூரோ கிண்ண தகுதிச் சுற்று ஆட்டங்கள் உள்பட இதுவரை இத்தாலி பத்து ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று உள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டம் பற்றிக் குறிப்பிட்ட முன்னாள் எவர்ட்டன் மத்திய திடல் வீரர் லியோன் ஒஸ்மான், "இத்தாலியக் குழு ஆரம்பம் முதல் இறுதி வரை ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்ெகாண்டதை மற்ற குழுக்கள் கவனத்தில் ெகாள்ள வேண்டும்," என்று குறிப் பிட்டார்.
இதேபோல் மான்செஸ்டர் யுனைட்டெட் குழுவின் முன்னாள் கேப்டன் ராய் கீன், "இந்தக் குழு போன்ற உயர் தரமிக்க குழுக்களிடம் எனக்குப்பிடித்தது என்னவென்றால் பந்து தங்களை விட்டுச் சென்றாலும் அவர்களின் சுறுசுறுப்பான விளையாடு திறனும் மற்ற குழுக்களை இங்கும் அங்கும் அசையவிடாமல் நெருக்குவது," என்றார்.
இதற்கு முந்தைய ஆட்டத்தில் துருக்கியை எதிர்கொண்ட இத்தாலிய குழுவினர், அந்த ஆட்டத்திலும் மூன்று கோல்களைப் போட்டு துருக்கியை உண்டு இல்லை என்று வேட்டையாடியது குறிப்பிடத்தக் கது.

