மலேசிய நிபுணர்கள் கவலை

கோலா­லம்­பூர்: மருத்­து­வ­ம­னைக்கு செல்­லும் முன்­னேரே உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தற்கு உரு­மா­றிய கொரோனா கிரு­மி­கள் கார­ண­மாக இருக்­க­லாம் என்று மலே­சிய நிபு­ணர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

டெல்டா வகை கிருமி போன்ற, புதிய வகை கிரு­மி­க­ளின் கார­ண­மாக நோயா­ளி­க­ளின் நிலைமை சீக்­கி­ரம் மோச­ம­டை­யக்­கூ­டும் என்று அர­சாங்க கொவிட்-19 தொற்­று­

நோ­யி­யல் பகுப்­பாய்வு, உத்­தி­கள் பணிக்­கு­ழு­வின் தலை­வ­ரும் பேரா­சி­ரி­ய­ரு­மான அவாங் புல்­கிபா அவாங் மஹ்­மூத் தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரி­வித்­தார்.

ஜூன் 14 ஆம் தேதி நில­வ­ரப்­படி உயி­ரி­ழந்த நிலை­யில் 370 பேர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு வரப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்­சின் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அவர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் அல்­லது 195 பேர் மே 14 முதல் ஜூன் 14 வரை­யி­லான நான்கு வாரங்­களில் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வரப்­பட்­ட­னர். கடந்த ஆண்டு முழு­வ­தி­லும் இந்த எண்­ணிக்கை 136ஆக இருந்

தது.

"மருத்­து­வ­ம­னைக்கு வரு­வ­தற்­குள் மாண்­ட­வர்­க­ளின் பிரேதப் பரி­சோ­தனை அறிக்­கை­கள் எங்­க­ளி­டம் இல்லை, எனவே அவர்­கள் எத­னால் இறந்­தார்­கள் என்­பதை அறிந்து கொள்­வது கடி­னம். மலே­சி­யா­வின் மர­பணு அல்­லது தொற்று

­நோ­யி­யல் கண்­கா­ணிப்பு குறை­வாக உள்­ளது, எனவே உரு­மா­றிய கிரு­மிப் பர­வல் குறித்த தெளி­வான தக­வல் இல்லை," என்­றார் அவாங் புல்­கிபா.

மேலும் சளிக்­காய்ச்­சல், லேசான இரு­மல் போன்ற அறி­கு­றி­க­ளை அவர்­கள் சட்டை செய்­யா­மல் இருந்­தி­ருக்­க­லாம் என்ற அவர், உரு­மா­றிய கிரு­மி­யின் அறி­கு­றி­கள் வெவ் வேறாக இருப்­ப­தை­யும் சுட்­டி­னார்.

தொற்று அதி­க­ரிப்பு

மலே­சி­யா­வில் கடந்த ஒரு வார­மாக இறங்­கு­மு­கத்­தில் இருந்த தொற்று சம்­ப­வங்­கள் நேற்று 6,440ஆக உயர்ந்­தது.

இது, இரண்­டாம் கட்ட தேசிய மீட்­சித் திட்­டம் தாம­த­மா­கக்­கூ­டும் என்­ப­தைக் காட்­டு­வ­தாக மலாய் மெயில் ஊட­கம் கூறு­கிறது.

மாண­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி

இதற்­கி­டையே, ஐந்து, ஆறாம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு அடுத்த மாதம் முதல் ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி போடப்­படும் என்று அறி­வி­யல், தொழில்­நுட்­பம், புத்தாக்கத்திற்கான அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­துள்­ளார்.

கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்­கை­யைப் பொறுத்து, ஜூலை அல்­லது ஆகஸ்ட் மாதத்­தில் அவர்­கள் பள்­ளிக்­குத் திரும்­பு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!