அனைத்­து­லக பய­ணி­க­ளுக்கு ஜெர்­மனி அனு­மதி

அனைத்­து­லக பய­ணி­க­ளுக்கு ஜெர்­மனி அனு­மதி

1 mins read
dca06f76-cb94-4f26-a214-e70e3de79e42
-

பெர்­லின்: கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ராக தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­கள் அல்லாத மற்ற பய­ணி­க­ளுக்கு இம்­மா­தம் 25ஆம் தேதி முதல் ஜெர்­மனி தனது எல்­லையை மீண்­டும் திறக்­கிறது.

ஆனால் பய­ணி­கள் ஜெர்­ம­னிக்­குள் நுழை­வ­தற்கு குறைந்­தது 14 நாட்­க­ளுக்கு முன்பே ஐரோப்­பிய மருந்­து­கள் முகமை ஒப்­பு­தல் அளித்த தடுப்­பூசிப் போட்­டி­ருக்க வேண்­டும்.

இதற்­கி­டையே, அமெ­ரிக்கா, ஹாங்காங், மக்காவ், தைவான் உள்ளிட்ட நாடுகள் மீதான பய­ணத் தடையை ஐரோப்­பிய ஒன்­றி­யம் நீக்கி­ உள்­ளது.