சிட்­னி­யில் முகக்­க­வ­சம் கட்­டா­யம்

சிட்­னி­யில் முகக்­க­வ­சம் கட்­டா­யம்

1 mins read
4197939c-5f55-4873-9ed4-91eca0e61b3f
-

சிட்னி: டெல்டா வகை கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை நான்­காக உயர்ந்­த­தை­ய­டுத்து, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி­

யில் பொது போக்­கு­வ­ரத்­தின் போது முகக்­க­வ­சம் அணிவது

கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. இது ஐந்து நாட்­க­ளுக்கு நடப்­பில் இருக்­கும்.

ஆனால் கடைத்­தொ­கு­தி­கள், திரை­ய­ரங்­கு­கள் போன்ற உள்­ள­ரங்க நட­வ­டிக்­கை­க­ளின்­போ­தும் மக்­கள் முகக்­க­வ­சம் அணிந்­து­கொள்ள அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

ஆனால் அனைத்து வெளிப்­புற நிகழ்ச்­சி­களும் திட்­ட­மிட்­ட­படி கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றை­க­ளோடு தொடர்ந்து நடை­பெ­றும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

கிட்­டத்­தட்ட ஒரு மாதத்­திற்­குப் பிறகு, வெளி­நாட்டு விமான ஊழி­யர்­களை அழைத்­துச் செல்­லும் ஓட்­டு­நர் ஒரு­வ­ருக்கு தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. அதைத் தொடர்ந்து நான்கு பேருக்கு டெல்டா வகை கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

"மக்­கள் பதற்­ற­ம­டைய வேண்­டாம், ஆனால் அதே சம­யம் அவர்­கள் அதிக எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்க வேண்­டும்," என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்­வர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.