அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­யது நெதர்­லாந்து, பெல்­ஜி­யம்

அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­யது நெதர்­லாந்து, பெல்­ஜி­யம்

1 mins read
8b7b7f8f-6285-449b-bac6-d75c5a9f2d4d
-

ஆம்ஸ்­டர்­டாம்: யூரோ கிண்­ணக் காற்­பந்துப் போட்­டி­களில் ஆஸ்­தி­ரி­யாவை வீழ்த்­திய நெதர்­லாந்­தும், டென்­மார்க்கை வீழ்த்­திய பெல்­ஜி­ய­மும் அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றின.

ஆஸ்­தி­ரி­யா­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தின் முற்­பாதி நேரத்­தின்­போது பெனால்டி வாய்ப்­பில் முன்­னிலை பெற்ற நெதர்­லாந்து பிற்­பா­தி­யில் மீண்டும் ஒரு கோலைப் போட்­டது.

இதை­ய­டுத்து நெதர்­லாந்து 2-0 கோல் எண்­ணிக்­கை­யில் ஆஸ்­தி­ரி­யா­வைத் தோற்­க­டித்­தது.

'சி' பிரி­வுக்­கான முதல் ஆட்­டத்­தில் ஏற்­கெ­னவே உக்­ரைனை வீழ்த்­தி­யி­ருந்த நெதர்­லாந்து, மொத்­தம் 6 புள்­ளி­கள் பெற்று அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது.

வரும் திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள ஆட்­டத்­தில் உக்­ரைனை வீழ்த்­தி­னால் மட்­டுமே ஆஸ்­தி­ரிய அணியால் அடுத்­தச் சுற்­றுக்கு முன்­னேற முடி­யும்.

பி பிரிவு ஆட்­டத்­தில் டென்­மார்க்கை 1-2 என்ற கோல் கணக்­கில் பெல்­ஜி­யம் வென்­றது.

ஆட்­டம் தொடங்­கிய இரண்­டா­வது நிமி­டத்­தில் கோல் போட்டு அசத்­திய டென்­மார்க் அணி­யால் அந்த முன்­னி­லையை கடைசி வரை தக்­க­வைத்­துக் கொள்ள முடி­ய­வில்லை.

கோலைச் சமன் செய்ய முடி­யா­மல் தடு­மா­றிய பெல்­ஜி­யம் கெவின் டி பிரய்­னின் அபா­ர

ஆட்­டத்­தால் மீண்­டெ­ழுந்­தது.

54வது நிமி­டத்­தில் லுகாகு உதைத்­த பந்தை கெவின் டி பிரய்ன சரி­யான நேரத்­தில், தோர்­ஹன் ஹசார்ட்­டி­டம் கொடுக்க, அவர் அதைக் கோலாக்கி ஆட்­டத்­தைச் சமன் செய்­தார்.

70வது நிமி­டத்­தில் கெவின் டி பிரய்ன ஒரு கோல் போட்டு அணியை வெற்றி பெறச் செய்­தார். ஏற்­கெ­னவே ரஷ்­யாவை வெற்றி கொண்­டி­ருந்த பெல்­ஜி­யம், இந்த வெற்­றியை தொடர்ந்து அடுத்­தச் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது.