கனடாவில் இரண்டு இந்தியர்களுக்கு மாநில அமைச்சு பொறுப்பு

1 mins read
ab2d40b4-503d-4dac-abf2-de23c75e3a24
-

கனாடவின் ஒன்டாரியோ மாநில சட்டமன்றத்தில் மேலும் இரண்டு இந்திய-கனடியர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் அங்குள்ள அமைச்சரவையில் மூன்று உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

ஒன்டாரியோவின் முதல் அமைச்சர் டக் போர்டு, தமது அமைச்சரவை உறுப்பினர்களை நேற்று மாற்றினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான பிரப்மீத் சக்காரியாவுக்கு 30 வயது. அம்மாநிலத்தில் அமைச்சர் பதவி ஏற்கும் முதல் தலைப்பாகை அணிந்துள்ள சீக்கியராக அவர் இருக்கிறார்.மற்றொருவர் திரு பரம் கில், 47.