மியன்மாருக்கு ஆயுதம் விற்காதீர்: உலக நாடுகளுக்கு ஐநா அறைகூவல்

மியன்மாருக்கு ஆயுதம் விற்காதீர்: உலக நாடுகளுக்கு ஐநா அறைகூவல்

2 mins read
a15d87a3-0c9c-4649-985d-c874df5e5cfc
திருவாட்டி ஆங் சான் சூச்சியின் 76வது பிறந்தநாளையொட்டி, அவரை விடுவிக்கக்கோரி யங்கூனில் நேற்று அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி -

யங்­கூன்: மியன்­மா­ருக்கு ஆயுத விற்­ப­னையை உட­ன­டி­யாக நிறுத்து­மாறு உலக நாடு­க­ளுக்கு ஐக்­கிய நாடு­கள் நிறு­வ­னம் அறை­கூ­வல் விடுத்­திருக்கிறது.

இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் ஜன­நா­யக ஆட்­சி­யைக் கவிழ்த்து, நிர்­வா­கத்­தைக் கைப்­பற்­றிய மியன்­மார் ராணு­வத்­தைக் கண்­டித்து ஐநா பொதுச் சபை தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யுள்­ளது.

திருவாட்டி ஆங் சான் சூச்சி உட்­பட தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்­மார் அர­சி­யல் தலை­வர்­கள் அனை­வ­ரை­யும் விடு­விக்க வேண்­டும் என்­றும் அமை­தி­யா­கப் போரா­டி­வ­ரும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மீதான வன்­முறை முடி­வுக்கு வர வேண்­டும் என்­றும் அது வலி­யுறுத்தியுள்ளது.

இந்­தத் தீர்­மா­னம் அர­சி­யல்­பூர்­வ­மாக முக்­கி­ய­மா­ன­தா­கப் பார்க்­கப்­படு­கிறது.

"மியன்­மா­ரில் பெரிய அள­வில் உள்­நாட்­டுப் போர் ஏற்­ப­டு­வ­தற்­கான அபா­யம் இருப்­பது உண்­மை­தான். அங்கு ராணு­வம் தனது முடி­வைத் திரும்­பப் பெறு­வ­தற்­கான வாய்ப்பு குறுகி வரு­கிறது," என்று மியன்­மா­ருக்­கான ஐநா சிறப்­புத் தூதர் கிறிஸ்­டின் ஸ்ரே­னர் பர்­க­னர், ஐநா பொதுச் சபை­யில் தெரி­வித்­தார்.

தீர்மானத்திற்கு 119 நாடு­கள் ஆத­ர­வ­ளித்­தன; பெலருஸ் மட்டும் எதிர்த்து வாக்களித்தது.

அது மியன்­மா­ரின் உள்­நாட்டு விவ­கா­ரம் என்­றும் நான்காண்­டு­களுக்­கு­முன் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ராணு­வ நடவடிக்கைகளுக்கு எதிராக தீர்­மா­னத்­தில் எந்­தத் தீர்­வும் குறிப்­பிடப்­ப­ட­வில்லை என்­றும் குறிப்­பிட்டு, சில நாடு­கள் தீர்­மா­னத்­தின் மீதான வாக்­கெ­டுப்­பில் பங்­கேற்­க­வில்லை.

இத­னி­டையே, தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்­மார் தலை­வர் ஆங் சான் சூச்­சி­யின் 76வது பிறந்­த­நாளை ஒட்டி, அவ­ரு­டைய ஆத­ர­வா­ளர்­கள் தங்­க­ளது கூந்­த­லில் மலர்­சூ­டி­ய­படி, நேற்று வீதி­களில் இறங்கி போராட்­டம் நடத்­தி­னர்.

அவர்­களில் தெட் சுவே வின் என்ற ஆர்­வ­ல­ரும் ஒரு­வர். சூச்சி அம்­மை­யார் ஆட்சி அதி­கா­ரத்­தில் இருந்­த­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக குரல்­கொ­டுத்­த­வர் அவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆயி­னும், "சூச்சி அம்­மை­யார் உட்­பட தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனை­வ­ரை­யும் விடு­விக்க வேண்­டும் என்­பதே என் கோரிக்கை," என்­றார் தெட்.