தடுப்பூசி போட்டுக்கொண்டால் வீடு, கார், தங்கம் வெல்ல வாய்ப்பு

ஹாங்­காங்: கொவிட்-19 பர­வல் மட்­டுப்­பட்டு வரும் நிலை­யில், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை ஊக்­கு­விக்­கும் வித­மாக ஹாங்­காங்­கில் வீடு, பென்ஸ் கார், தங்­கக் கட்­டி­கள் என ஏரா­ள­மான பரி­சுப்­பொ­ருள்­கள் அறி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

குவுன் டோங் பகு­தி­யில் அமைந்­துள்ள, 10.8 மில்­லி­யன் ஹாங்­காங் டாலர் (S$1.87 மி.) மதிப்­பி­லான, 449 சதுர அடி பரப்­பளவு கொண்ட அவ்­வீட்­டிற்­கான முத்­தி­ரைத்­தாள் கட்­ட­ணத்தையும் முத­லாண்டுக்கான நிர்­வா­கக் கட்­ட­ணத்தையும் தானே ஏற்­றுக்­கொள்­வதாக அதை வழங்­கும் சினோ குழு­மம் அறி­வித்­துள்­ளது.

அத்­து­டன், தலா 100,000 ஹாங்­காங் டாலர் மதிப்­புள்ள 20 'பிரீ­பெய்டு' கட­னட்­டை­க­ளை­யும் அந்த நிறு­வ­னம் பரி­சாக வழங்­க­வுள்­ளது.

இப்­படி விலை­யு­யர்ந்த பரி­சுப்­பொ­ருள்­கள் குறித்த அறி­விப்­பு­கள் வெளி­யா­னதை அடுத்து, ஹாங்­காங்­கில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் அல்­லது முன்­ப­திவு செய்­து­கொள்­வோர் விகி­தம் அதி­க­ரித்­துள்­ளது.

மொத்­தம் 7.5 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட ஹாங்­காங்­கில் கடந்த பிப்­ர­வரி 26 முதல் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது. அங்கு இது­வரை 25 விழுக்­காட்­டி­னர், அதா­வது 1.9 மில்­லி­யன் பேர் குறைந்­தது ஒரு தடுப்­பூ­சி­யை­யும் 1.2 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!