சௌத்ஹேம்டன்: உலக டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியாளர் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. ஆயினும், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று இரண்டாம் நாளில் பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் இந்திய அணியைப் பந்தடிக்க அழைத்தார். அதை அடுத்து, தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் அருமையான தொடக்கம் தந்தனர். ஆனாலும், ரோகித் 34 ஓட்டங்களிலும் சுப்மன் 28 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நேற்று உணவு இடைவேளையின் போது இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 69 ஓட்டங்களை எடுத்திருந்தது. அணித்தலைவர் கோஹ்லி ஆறு ஓட்டங்களுடனும் புஜாரா ஓட்டக் கணக்கைத் தொடங்காமலும் களத்தில் இருந்தனர்.
இரு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி
1 mins read
-

