மந்தமாக ஆடி வாய்ப்பை நழுவவிட்ட இங்கிலாந்து

மந்தமாக ஆடி வாய்ப்பை நழுவவிட்ட இங்கிலாந்து

1 mins read
22994343-1170-46f4-89b7-e1a0e086ddd7
-

லண்­டன்: பழைய எதி­ரி­யான ஸ்காட்­லாந்தை வீழ்த்தி இருந்­தால், இங்­கி­லாந்து இந்­நே­ரம் ஐரோப்பியக் காற்­பந்­துக் கிண்­ணத்­தின் காலி­று­திக்கு முந்­திய சுற்­றுக்­குள் நுழைந்­தி­ருக்­க­லாம்.

ஆனால், இங்­கி­லாந்து மந்­த­மாக ஆடி­ய­தால் நேற்று முன்­தி­னம் நடந்த அந்த ஆட்­டம் 0-0 என கோல் ஏ­து­மின்றி சம­நி­லை­யில் முடிந்­தது.

குரோ­வே­ஷி­யா­வுக்கு எதி­ரான முதல் ஆட்­டத்­தைப் போலவே, இந்த ஆட்­டத்­தி­லும் நட்­சத்­திர வீர­ரும் அணித்­த­லை­வ­ரு­மான ஹேரி கேனின் செயல்­பாடு ஏமாற்­ற­ம­ளிப்­ப­தாக இருந்­தது. இத­னால், ஆட்­டத்­தின் பிற்­பா­தி­யில் அவ­ருக்­குப் பதி­லாக மார்க்­கஸ் ரேஷ்­ஃபர்டை மாற்று வீர­ரா­கக் கள­மி­றக்­கி­னார் இங்­கி­லாந்­துப் பயிற்­று­விப்­பா­ளர் கேரத் சௌத்­கேட்.

ஆனா­லும், அந்த அணி­யால் ஒரு கோல்­கூட போட முடி­ய­வில்லை. ஆட்­டத்­தின் தொடக்­கத்­தில் ஜான் ஸ்டோன்ஸ் தலை­யால் முட்­டிய பந்து கோல் கம்­பத்­தில் பட்­டுத் திரும்­பி­யது. பிற்­பாதி ஆட்­டத்­தின் மூன்­றாம் நிமி­டத்­தில் மேசன் மௌன்ட் வலையை நோக்கி உதைத்த பந்தை அற்­பு­த­மா­கப் பாய்ந்து தடுத்­தார் ஸ்காட்­லாந்து கோல்­காப்­பா­ளர் டேவிட் மார்­ஷல்.

ஆட்­ட நேரம் முழு­வ­தும் ஸ்காட்­லாந்து அணி, இங்­கி­லாந்துக்குப் பெரும் அச்­சு­றுத்­த­லா­கவே விளங்­கி­யது. குறிப்­பாக, கைரன் டியர்னி, பில்லி கில்­மோர் ஆகி­யோர் ஆடி­ய­வி­தம் வியக்­கத்­தக்க வகை­யில் இருந்­தது.

இத­னி­டையே, கிளாஸ்கோவில் செக் குடி­ய­ர­சும் குரோ­வே­ஷி­யா­வும் மோதிய இன்னோர் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்­கில் சமனானது.

நான்கு புள்­ளி­க­ளு­டன் 'டி' பிரி­வில் இரண்­டா­மி­டத்­தில் உள்ள இங்­கி­லாந்து, நாளை மறு­நாள் நடக்­கும் ஆட்­ட­மொன்­றில் செக் குடி­ய­ர­சு­டன் மோத­வுள்­ளது. அந்த ஆட்­டத்­தில் தோல்வியைத் தவிர்த்தாலே போதும், இங்கி­லாந்து அடுத்த சுற்றுக்கு முன்­னேறி­வி­டும்.