நியூயார்க்கில் கண்கொள்ளா காட்சியைப் பார்த்தவாறு யோகாவில் ஈடுபட்ட பெண்கள்

1 mins read
f000bd6e-4e20-4a08-8fd7-d61285522314
படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வியாழக்கிழமை யோகா பயிற்சியில் ஈடுபட்ட இந்தப் பெண்கள், Edge Observation Deck எனும் கட்டடம் ஒன்றின் மொட்டை மாடியில் இருந்தவாறு வானளாவிய கட்டடங்களை நோக்கி கண்கொள்ளா காட்சியை ரசித்தனர்.

ஏறக்குறைய 345 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த Edge Observation Deck, மேற்கு அரைக்கோளத்தின் (Western Hemisphere) ஆக உயரிய வெளிப்புற 'ஸ்கை டெக்' என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்க மக்கள்தொகையில் 52 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர், அதாவது 174 மில்லியன் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் கொவி-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் 64.8 விழுக்காடு பெரியவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்