'எய்ம்ஸ்' மருத்துவமனையின் தலைவர் எச்சரிக்கை: இந்தியாவில் 6-8 வாரங்களில் கிருமித்தொற்று 3வது அலை

'எய்ம்ஸ்' மருத்துவமனையின் தலைவர் எச்சரிக்கை: இந்தியாவில் 6-8 வாரங்களில் கிருமித்தொற்று 3வது அலை

1 mins read
e9141448-ad8d-43ac-afae-3234be818477
கடைகளிலும் சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

பொதுமக்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கும் இணங்கி நடக்கத் தவறினால், அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை அடுத்து, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன.

இதனால், பல நாள்களாக தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் வெளியில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைகளிலும் சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களில் பலரும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் திரிவதைச் செய்தி நிறுவனங்களின் படங்கள் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்