நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து ஆராயக் குழு

நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து ஆராயக் குழு

1 mins read
cdcfc7e5-3e49-4529-9b76-5d21c5b2f2b5
-

கோலா­லம்­பூர்: மலே­சிய நாடா­ளு­மன்­றம் மீண்­டும் கூட்­டப்­ப­டு­

வ­தற்கு முன்­னர் முக்­கி­ய­மான அம்­சங்­க­ளைப் பற்றி ஆராய அரசு மற்­றும் எதிர்க்­கட்சி பிர­தி­நி­தி­கள் அடங்­கிய குழு அமைக்­கப்­பட்­டு

உள்­ள­தாக அந்­நாட்டு பிர­த­மர் முகை­தீன் யாசின் நேற்று தெரி­வித்­தார்.

இது நேர­டி­யாக அல்­லது இணை­யம், நேர­டி­யாக என இரண்­டும் கலந்த நாடா­ளு­மன்ற கூட்­ட­மாக இருக்க வேண்­டுமா என்­பதைக் குழு பரி­சீ­லிக்­கும் என்று அவர் கூறி­னார்.

கோலா­லம்­பூர் கன்­வென்­ஷன் சென்­டர் தடுப்­பூசி மையத்தை நேற்று பார்­வை­யிட்ட பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர் இவ்­வாறு கூறி­னார்.

நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­பட்­ட­பின்­னர், ஏதே­னும் சிக்­கல்­கள் ஏற்­ப­டா­மல் இருப்­ப­தற்கு தேவை­யான அனைத்து அம்சங்களையும் அர­சாங்­கம் ஆராய்ந்து பார்க்க வேண்­டும் என்­றார்.

நாடா­ளு­மன்ற கூட்­டத்­தைத் தாம­தப்­ப­டுத்­து­வது தனது நோக்­கம் அல்ல, ஆனால் அவை கவ­ன­மாக ஆரா­யப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­ என்­றார் அவர்.