தைவானுக்கு அமெரிக்கா 2.5 மில்லியன் தடுப்பூசிகள்

தைவானுக்கு அமெரிக்கா 2.5 மில்லியன் தடுப்பூசிகள்

1 mins read
f660eabd-2bc6-43c0-a6e6-6f854036367f
-
Google News Preferred Icon

தைப்பே: தைவா­னில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யில், அந்­நாட்­டிற்­கான தடுப்­பூ­சி­க­ளின் எண்­ணிக்­கையை அமெ­ரிக்கா 2.5 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ளது.

தைவா­னு­டன் அர­சி­யல் ரீதி­யி­லான உற­வைப் பலப்­ப­டுத்­திக் கொள்ள சீனா­வோடு போட்­டிப் போடும் அமெ­ரிக்கா 'தடுப்­பூசி ராஜ­தந்­தி­ரம்' மூலம் அதை வலுப்

படுத்­தப் பார்க்­கிறது.

முன்பு தைவா­னுக்கு 750,000 தடுப்­பூ­சி­கள் கொடுப்­ப­தாக அமெ­ரிக்கா கூறி­யி­ருந்த நிலை­யில், பைடன் நிர்­வா­கம் தற்­போது அதை அதி­க­ரித்து உள்­ள­தற்கு தைவான் அதி­பர், வெளி­யு­றவு அமைச்­சர் ஆகிய இரு­வ­ரும் நன்றி தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, ஹாங்­காங்­கில் உள்ள பிர­தி­நி­தித்­துவ அலு­வ­ல­கத்­தில் பணி­பு­ரி­யும் தைவான் அதி­கா­ரி­கள் அங்­கி­ருந்து வெளி­யே­றத் தொடங்­கு­வ­தாக மூத்த அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

தைவான் மீது உரிமை கோரு­வதை ஆத­ரிக்­கும் பெய்­ஜிங்­கின் ஆவ­ணத்­தில் கையெ­ழுத்­தி­டு­மாறு ஹாங்­காங் அர­சாங்­கம் தனது அதி­கா­ரி­க­ளுக்கு தொடர்ந்து அழுத்­தம் கொடுத்­த­த­தால் தனது அதி­கா­ரி­கள் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தாக தைவான் தெரிவித் தது.