சீனாவில் ஒரு பில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

சீனாவில் ஒரு பில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

1 mins read
441dea63-39bf-4437-adc3-04b1e4e05122
-

இது உலகளவில் போடப்பட்ட தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.

பெய்­ஜிங்: சீனா­வில் ஒரு பில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டு சுகா­தார அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர். இது உல­க­ள­வில் போடப்­பட்ட தடுப்­பூ­சி­களில் மூன்­றில் ஒரு பங்­கிற்­கும் அதி­க­மா­கும்.

உல­க­ள­வில் 2.5 பில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக ஏஎ­ஃப்பி புள்ளி விவ­ரம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தது.

ஆனால் சீன மக்­கள்­தொ­கை­யில் எத்­தனை விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது என்­பது இன்­னும் தெளி­வாக தெரி­ய­வில்லை.

ஆனால் கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் சீனா வெற்றி அடைந்­த­தைத்­ தொ­டர்ந்து, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்­ணிக்கை அங்கு மெது­வ­டைய தொடங்கி உள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை ஊக்­கு­விப்­ப­தற்­காக சில மாநி­லங்­கள் இல­வ­ச­மாக தடுப்­பூ­சி­கள் போடுகின்றன.

மத்­திய அன்­ஹுவி மாநி­லத்­தில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முட்­டை­கள் இல­வ­ச­மாக கொடுக்­கப்­ப­டு­

கின்­றன. பெய்­ஜிங்­கில் தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்குப் பொருட்­கள் வாங்­கு­வ­தற்­கான பற்­றுச்­

சீட்­டு­கள் கொடுக்­கப்­படுகின்றன.

இந்த மாத இறு­திக்­குள்

கிட்­டத்­தட்ட 1.4 பில்­லி­யன் மக்­க­ளுக்கு முழு­மை­யாக தடுப்­பூசி போட வேண்­டும் என்று சீனா இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.