சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த அழைப்பு

வேக­மாக பர­வக்­கூ­டிய உரு­மா­றிய வகை கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளதை அதி­க­மான நாடு­கள் உறுதி செய்­துள்ள நிலை­யில், பொது சுகா­தார, சமூக நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்­த­வும் அவற்­றைத் தீவி­ர­மாக செயல்­ப­டுத்­த­வும் தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளுக்கு உலக சுகா­தார அமைப்பு அழைப்பு விடுத்­துள்­ளது.

மேலும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று மீண்­டும் அதி­க­ரிக்­கா­மல் தடுக்­கும் வகை­யில் தடுப்­பூசி போடு­வதை விரை­வு­ப­டுத்த வேண்­டும் என்­றும் அமைப்பு கூறி­யுள்­ளது.

"சோதனை, தட­ம­றி­தல் மற்­றும் தனி­மைப்­ப­டுத்துதல் போன்­ற­வற்றை நாம் தொடர்ந்து வலுப்­ப­டுத்த வேண்­டும்.

"சமூக இடை­வெளி, கை கழு­வு­தல், முகக்­க­வ­சம் அணி­வது போன்­றவை முழு­மை­யா­க­வும் நீண்ட காலத்­திற்­கும் பின்­பற்­றப்­பட வேண்­டும்," என்று தென்­கி­ழக்கு ஆசி­யா­விற்­கான உலக சுகா­தார அமைப்­பின் வட்­டார இயக்­கு­னர் டாக்­டர் பூனம் கேத்­ர­பால் சிங் கூறி­னார்.

இந்­தியா, பங்­ளா­தேஷ், நேப்­பா­ளம் உள்­ளிட்ட நாடு­க­ளைத் தொடர்ந்து இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் மாலத்­தீவு மற்­றும் மியன்­மார் நாடு­க­ளி­லும் உரு­மா­றிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!