வேகமாக பரவக்கூடிய உருமாறிய வகை கிருமித்தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அதிகமான நாடுகள் உறுதி செய்துள்ள நிலையில், பொது சுகாதார, சமூக நடவடிக்கைகளை மேம்படுத்தவும் அவற்றைத் தீவிரமாக செயல்படுத்தவும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் கொவிட்-19 கிருமித்தொற்று மீண்டும் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமைப்பு கூறியுள்ளது.
"சோதனை, தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் போன்றவற்றை நாம் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.
"சமூக இடைவெளி, கை கழுவுதல், முகக்கவசம் அணிவது போன்றவை முழுமையாகவும் நீண்ட காலத்திற்கும் பின்பற்றப்பட வேண்டும்," என்று தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் வட்டார இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறினார்.
இந்தியா, பங்ளாதேஷ், நேப்பாளம் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இவ்வாரத் தொடக்கத்தில் மாலத்தீவு மற்றும் மியன்மார் நாடுகளிலும் உருமாறிய கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டன.

