தோல்விக்கு நானே முழு பொறுப்பு: போர்ச்சுகல் பயிற்றுவிப்பாளர்

தோல்விக்கு நானே முழு பொறுப்பு: போர்ச்சுகல் பயிற்றுவிப்பாளர்

2 mins read
db0bba12-4ceb-46ef-87af-144628f7ab0a
முக்கிய காற்பந்துப் போட்டிகளில் ஜெர்மனியிடம் தோற்ப்பதைத் தவிர்க்க முடியாமல் போராடும் போர்ச்சுகல் 4-2 என நேற்றும் வீழ்ந்தது. தனது குழுவின் நான்காவது கோலுக்காக ஜெர்மனியின் தற்காப்பு ஆட்டக்காரர் ராபின் கோஸன்ஸ் (இடது) தலையால் முட்டி பந்தை எதிரணியின் வலைக்குள் தள்ளினார்.படம்: ஏஎஃப்பி -

மியூ­னிச்: யூரோ காற்­பந்­துப் போட்­டி­யில் ஜெர்­ம­னி­யி­டம் அடைந்த மோச­மான தோல்­விக்­குத் தானே முழு பொறுப்­பை­யும் ஏற்­றுக்­கொள்­வ­தாக போர்ச்­சு­கல் அணி­யின் பயிற்­று­விப்­பா­ளர் ஃபெர்ணாண்டோ சான்­டோஸ் கூறி­யுள்­ளார்.

"நாங்­கள் மத்­திய திடல் வியூ­கத்தை மாற்­றி­ய­மைத்­தோம். ஜெர்­ம­னி­யின் குண்­டோ­கன், டோனி க்ரூஸ் ஆகி­யோ­ருக்கு அழுத்தம் கொடுக்க விரும்­பி­னோம்.

"ஆனால் எங்­க­ளது மத்­திய திடல் ஆட்­டத்­தில் எப்­போ­துமே ஒரு­வர் குறை­வாக இருந்­த­தால் நாங்­கள் பின்­னடைந்­தது தெளி­வா­கத் தெரிந்­தது. இது நான் அமைத்த உத்தி என்­ப­தால் அணி­யின் தோல்­விக்கு நானே முழு பொறுப்­பா­வேன்.

"அவர்­க­ளைத் தடுத்து நிறுத்தி, எங்­க­ளால் ஆதிக்­கம் செலுத்த முடி­ய­வில்லை என்­றால் எங்­க­ளி­டம் பிரச்­சி­னை­கள் உள்­ளன என்று அர்த்­தம்," என்­றார் போர்ச்­சு­கல் பயிற்­று­விப்­பா­ளர் சான்­டோஸ்.

போட்டி முழு­வ­தும் தற்­காப்பு ஆட்­டத்­தில் தனது வீரர்­க­ளின் தவ­று­களை சாண்­டோஸ் சுட்­டிக்­காட்­டிய போதி­லும், அணி­யின் தோல்­விக்­குத் தனது வீரர்­களை குறைகூற அவர் மறுத்­து­விட்­டார்.

போர்ச்­சு­க­லின் நட்­சத்­திர வீரர் ரொனால்டோ முதல் 15 நிமி­டத்­தி­லேயே கோல் போட்டு தனது அணிக்­குப் பெற்று தந்த முன்­னி­லைக்கு சக வீரர்­க­ளின் இரண்டு சொந்த கோல்­க­ளால் பயன் இல்­லா­மல் போனது.

போர்ச்­சு­க­லின் தற்­காப்பை உடைத்து, பிற்­பாதி ஆட்­டத்­தில் மேலும் இரண்டு கோல்­க­ளைப் போட்­ட­தால் ஜெர்­மனி 4-2 என்ற கோல்­ க­ணக்­கில் வெற்றி பெற்­றது.

இதற்­கி­டையே 45வது நிமி­டத்­தில் பெர்­னார்டோ சில்­வா­விற்­குப் பதி­லாக சான்­செ­ஸைக் கள­மி­றக்­கி­ய­தும் போர்ச்­சு­க­லின் தோல்­விக்­குக் கார­ண­மாக கூறப்­ப­டு­கிறது. ஏனெ­னில் அதன் பிற­கு­தான் ஜெர்­மனி இரண்டு கோல்­க­ளைப் போட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­விரு அணி­களும் மூன்று புள்ளி

களு­டன் பிரான்­சுக்கு அடுத்த இடங்­களில் இருக்­கின்­றன.

எந்த அணி அடுத்­தச் சுற்­றுக்கு முன்­னே­றும் என்­பதை புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள ஆட்­டங்­கள் முடிவு செய்­யும். அன்­றைய தினம் போர்ச்­சு­கல்-பிரான்ஸ், ஜெர்­மனி-ஹங்­கேரி ஆட்­டங்­கள் நடை­பெ­ற­வுள்­ளன.