பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு
டொராண்டோ: பிறந்தநாள் விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பிள்ளைகள் உட்பட நால்வர் காயமடைந்தனர்.
பிள்ளைகளைக் குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப் படவில்லை என்று கூறிய போலிஸ் அதிகாரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடி வருவதாகவும் கூறினர். ஆனால் அவர்களைப் பற்றிய வேறு எந்த விவரங்களையும் விசாரணையாளர்கள் தெரிவிக்கவில்லை.
ஒரு வயது சிறுவன், ஐந்து வயது சிறுமி, 11 வயது சிறுவன் உள்ளிட்டவர்களோடு 23 வயது ஆடவர் ஒருவரும் காயமடைந்தனர். இவர்களில் ஒரு பிள்ளையின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் போலிசார் தெரிவித்தனர்.
தென்கொரியா: கட்டுப்பாடுகள் தளர்வு
சோல்: தென்கொரியாவின் மக்கட்தொகையில்
29.2 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை
அடுத்து, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் கிரேட்டர் சோல் பகுதியில் சமூக இடைவெளி கட்டுப்பாட்டு தளர்த்தப்படு
வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட ஒன்று
கூடல்களுக்கு ஆறு பேர் வரை அனுமதி அளிக்கப்பட்டு
உள்ளது. உணவகங்கள், இரவு நேர கேளிக்கை கூடங்கள் இனி இரவு 12 மணி வரை செயல்படும்.
ஆப்பிள் டெய்லி நிர்வாகிகளுக்கு ஹாங்காங் நீதிமன்றம் பிணை மறுப்பு
ஹாங்காங்: வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ள ஹாங்காங்கின் ஆப்பிள் டெய்லி நாளிதழின் தலைமை செய்தியாசிரியா் ரையன் லா, தலைமை செயலதி
காரி சேயங் கிம்-ஹங் ஆகியோருக்கு ஹாங்காங் நீதிமன்றத் தில் பிணை மறுக்கப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் பிணை அளிக்கப்பட்டால், மீண்டும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த
மாட்டாா்கள் என்பதற்கான உத்தரவாதம் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
கூட்டத்திற்குள் செலுத்தப்பட்ட வாகனம்; ஃபுளோரிடாவில் ஒருவர் பலி
ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் நடத்திய பேரணி கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வாகனத்தை ஓட்டியதால் ஒருவர் மாண்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுவிட்டாலும் இதுவேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது உடனடியாக தெரியவில்லை என்று போலிசார் கூறினர். ஆனால் இது ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான தீவிரவாத தாக்குதல் என்றார் அப்பகுதி மேயர் டிரான்டலிஸ்.

