ஹாங்காங்: சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை தொற்றுநோய் அபாயமுள்ள நாடுகளாக ஹாங்காங் வகைப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தும் காலத்தை ஏழு நாட்களாக குறைக்க ஹாங்காங் திட்ட மிட்டுள்ளது.
ஆனால் அவர்கள் முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர் களாக இருக்க வேண்டும்.
பரிசோதனையிலும் அவர் களுக்கு கிருமித்தொற்று இருக்கக் கூடாது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்தது.
இது தொடர்பான தளர்வுகளை ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி யான கேரி லாம் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கவிருந்தார்.
ஹாங்காங்கில் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனால் தற்போது தொற்று கட்டுக்குள் இருப்பதால் சில தளர்வுகளை அறிவிக்க ஹாங்காங் தயாராகி வருகிறது. தற்போது வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் 21 நாட்களில் தனிமையில் இருக்க வேண்டும்.
ஒர்க் விசா வைத்திருப்பவர்கள், நோய்த்தொற்று அபாயமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் ஆகியோருக்கு புதிய ஏழு நாள் தனிமை உத்தரவு பொருந்தும்.
இம்மாதத் தொடக்கத்தில் அரசாங்க ஆலோசனைக் குழு வெளியிட்ட தளர்வு பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து சில நாடுகளுக்கு தனிமைப்படுத்தும் காலம் குறைக்கப் படவிருக்கிறது. புதிய மாற்றம், ஹாங்காங்கின் தளர்வுகளில் முக்கிய மைல்கல் என்று கூறப்படு கிறது. நோய்த் தொற்று அபாயமுள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரைத் தவிர ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

