அசராத நம்பிக்கையுடன் முன்னேறும் இத்தாலி

1 mins read
4b96b574-a41f-4f04-9da7-0d5fd291399c
-

யூரோ 2020 காற்­பந்து போட்­டி­யில் இது­வ­ரை­யில் ஐரோப்­பிய காற்­பந்­தின் ஜாம்­ப­வான்­கள் புள்­ளி­களை இழந்­து­வ­ரும் பட்­சத்­தில், ஆடிய மூன்று ஆட்­டங்­க­ளி­லும் வெற்றி கனியை மட்­டுமே சுவைத்து வரு­கிறது இத்­தா­லிய அணி. வேல்ஸ் அணி­யு­டன் அது நேற்று மோதிய ஆட்­டத்­தில், 1-0 என்ற கோல் கணக்­கில் வென்று குருப் 'ஏ' பட்­டி­ய­லில் 9 புள்­ளி­க­ளு­டன் முத­லி­டம் வகித்து போட்­டி­யின் 'ரவுண்ட் ஒஃப் 16' சுற்­றுக்கு முன்­னே­று­கிறது.

ஆட்­டத்­தின் ஒரே கோலை இத்­தா­லிய வீரர் மெத்­தியோ பெசினா 39வது நிமி­டத்­தில் புகுத்தி தம் குழு­வுக்கு வெற்­றி­யைத் தேடித் தந்­தார்.

மற்ற குருப் 'ஏ' ஆட்­டத்­தில், சுவிட்­சர்­லாந்து குழு 3-1 என்ற கோல் கணக்­கில் துருக்கி குழுவை வீழ்த்­தி­யது.

நேற்­றைய ஆட்­டத்­தில் தோல்வி கண்­டா­லும், குருப் 'ஏ' பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்தை வகிக்­கும் வேல்ஸ் அணி­யும் போட்­டி­யின் அடுத்த சுற்­றுக்கு முன்­னே­று­கிறது. சுவிட்­சர்­லாந்து குழு­வும் வேல்ஸ் அணியை போல மூன்று ஆட்­டங்­களில் 4 புள்­ளி­களை பெற்­றி­ருந்­த­போ­தும், கோல் வித்­தி­யா­சத்­தில் வேல்ஸ் அணி முன்­னி­லை­யில் இருந்­த­தால் அது பட்­டி­ய­லில் மூன்­றாம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டது. இருப்­பி­னும், சுவிட்­சர்­லாந்து அணி குருப் சுற்­றின் சிறந்த 3வது அணி­யாக அடுத்த சுற்­றுக்கு முன்­னேற வாய்ப்­புள்­ளது. வரும் ஜூன் 26ஆம் தேதி, இத்­தாலி அணி 'குருப் சி'யில் 2வது இடத்­தில் இடம்­பெ­றும் குழு­வு­டன் பொரு­தும்.