தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 10,000 ரசிகர்கள்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 10,000 ரசிகர்கள்

1 mins read
f70d9fe6-3866-4cdd-9014-7ed9f9378f20
-

தோக்­கியோ: தோக்­கியோ ஒலிம்­பிக் போட்­டிக்கு 10,000 ரசி­கர்­கள் வரை அனு­ம­திக்­கப் ­ப­ட­வி­ருக்­கின்­ற­னர். சுகா­தார துறை நிபு­ணர்­ க­ளின் எச்­ச­ரிக்­கை­யை­யும் மீறி தோக்­கியோ ஒலிம்­பிக் நிர்­வாகம் இந்த முடிவை எடுத்­துள்­ள­து. வெளி­நாட்டு பார்­வை­யா­ளர்­கள் பங்­கேற்க தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் விளை­யாட்டு நடை­பெ­றும் அரங்­கத்­தில் 50 விழுக்­காடு உள்ளூர் ரசி­கர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­டு­கிறது. ரசி­கர்­கள் கத்­தவோ சத்­த­மாக பேசவோ கூடாது. விளை­யாட்டு முடி­யும் வரை முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும்.

அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின் பற்றி முறையான நடவடிக்கைகள் மூலம் ஒலிம்பிக் போட்டியை ரசிகர்களுடன் நடத்த முடியும் என்று தான் நம்புவதாக தோக்கியோ ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் செய்கோ ஹஷிமோட்டோ தெரிவித்தார்.

ஜூலை 23ஆம் தேதி ஒலிம்­பிக் போட்டி தொடங்­கு­கிறது.