செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f962ff2a-cd93-40c6-8ae5-8f56192702ad
-

இந்தோனீசியாவில் புதிதாக

14,536 பேருக்குத்தொற்று

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஒரே நாளில் புதிதாக 14,536 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து கிருமித் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு மில்லி யனைத் தாண்டியுள்ளது. இதனால் அடுத்த இரு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை அரசாங்கம் கடுமையாக்கி உள்ளது என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

கிருமிப் பரவல் கட்டுக்கடங்காமல் பரவும் சிவப்பு வட்டாரங்களில் கட்டுப்பாடுகள் அமலாக்கப்படும் என்று பொருளியல் விவகார ஒருங்கிணைப்பு அமைச்சரான ஹர்டார்டோ நேற்று ெசய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாய்லாந்தில் தளர்வுகள்

பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இரவு 11 மணி முதல் காலை 4.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்

பட்ட சிறிய கடைகளுக்கு தற்போது 24 மணி நேரமும் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம், அறிவியல் பூங்கா, கலை மற்றும் கலாசார நிலையங்கள், நூலகங்கள், அரங்கங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாநிலங்களுக்கும்

தடுப்பூசி: ஆஸி. பிரதமர்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பகுதிகளுக்கும் தேவையான தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதி அளித்துள்ளார். தடுப்பூசி போடுவது தாமதமானதால் பிரதமரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறுபது வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று அண்மையில் அரசாங்கம் புதிய பரிந்துரையை வெளியிட்டது. இதனால் தடுப்பூசி பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி விநி யோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து

மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

டோங்குவானில் முதல் தொற்று

பெய்ஜிங்: சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் தயாரிப்பு நிலையமாகத் திகழும் டோங்குவானில் புதிய தொற்றுச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆங்காங்கே தடுப்புகள் போடப்பட்டு அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படுகிறது. டோங்குவானில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இதையடுத்து பரிசோதனை முடியும் வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.