அமெரிக்காவில் உருமாறிய கிருமி பரவும் அபாயம்

அமெரிக்காவில் உருமாறிய கிருமி பரவும் அபாயம்

2 mins read
bb0069b9-5041-471e-82a2-9fddf7268175
-

வாஷிங்­டன்: அதி­வே­க­மா­கப் பரவி உலக நாடு­களை அச்­சு­றுத்­தி­வ­ரும் ஆபத்­தான டெல்டா வகை உரு­மா­றிய கொரோனா கிரு­மித்­தொற்று அமெ­ரிக்­கா­வின் தடுப்­பூ­சிப் பணி முழு­மை­ய­டை­யாத மாநி­லங்­களில் பரவி வரு­வ­தாக ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் 700 வட்­டா­ரங்­களில் ஹெலிக்ஸ் ஆய்வு நிறு­வ­னம் 20,000 மாதி­ரி­க­ளைக் கொண்டு செய்த ஆய்­வில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­தி­யா­வில் காணப்­பட்ட உரு­மா­றிய கொரோ­னா­வான டெல்டா வகைக் கிருமி பர­வி­யுள்­ள­தாக இந்த ஆய்வு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

சீனா­வின் வூஹான் நக­ரில் உரு­வா­ன­தா­கக் கூறப்­படும் கொரோனா கிருமி பல நாடு­களில் உரு­மாற்­றம் பெற்று உலகை அச்­சு­றுத்தி வரு­கிறது.

இந்­தக் கிருமி இப்­போது அமெ­ரிக்­கா­வில் குறைந்த விழுக்­காட்­டி­ன­ருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்ள மாநிலங்களை அச்­சு­றுத்தி வரு­வ­தாக அந்த நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

அங்கு பரவி வரும் டெல்டா வகைக் கிருமி மேலும் உரு­மாற்­றம் பெற்று பல்கிப் பெருகும் வாய்ப்­பு­உள்­ள­தாக அந்த ஆய்வு நிறு­வ­னம் கூறி­யது.

இந்­தக் கிரு­மித்தொற்று பர­வும் காலம் நீடித்தால், மனித அணுக்­களில் எளி­தாக ஊடு­ருவி பெருக அதிக வாய்ப்­பு­ உள்­ளது.

"அதி­வே­க­மா­கப் பரவி பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது டெல்டா வகைக் கிருமி. இந்தக் கிருமி இப்போது அமெரிக்காவிலும் பரவக் கூடும் என சந்தேகிக்கிறேன்," என்று கூறி­யுள்­ளார் அந்த ஆய்வு நிறு­வ­னத்­தின் துணைத்­த­லை­வர் டாக்­டர் வில்­லி­யம் லீ.

சாதா­ரண கொரோனா கிரு­மி­யைக் காட்­டி­லும் டெல்டா வகை உரு­மா­றிய கொரோ­னா­வின் பர­வும் ஆற்­றல் இரண்டு மடங்கு அதி­கம். முன்பு பிரே­சி­லில் தடுப்­பூ­சிப் பணி முடிவடைந்த வட்­டா­ரம் ஒன்­றில் 'கம்மா' வகை கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

அமெ­ரிக்க மக்­கள் தொகை­யில் இது­வரை 45 விழுக்­காட்­டி­ன­ருக்கு முழு­மை­யாக தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு நோய்த்­தடுப்பு மற்­றும் கட்­டுப்­பாடு நிலை­யத்­தின் அறிக்கை தெரி­விக்­கிறது.

ஹெலிக்ஸ் ஆய்வு நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்கை, இது­வரை மதிப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­த­வில்லை என்று தெரி­கிறது.