தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்யாவை வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியது டென்மார்க்

2 mins read
31854e89-ce02-4ed1-b70f-db6682848692
ரஷ்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமது குழுவின் நான்காவது கோலைப் போட்ட டென்மார்க்கின் ஜோக்கிம் மஹ்லே (வலது) தமது மகிழ்ச்சியை சக ஆட்டக்காரர் களுடன் வெளிப்படுத்துகிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

கோபன்ஹேகன்: யூரோ போட்­டி­யின் 'பி' பிரிவு ஆட்­டத்­தில் ரஷ்­யாவை 4-1 என்ற கோல் கணக்­கில் வீழ்த்தி அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­யது டென்­மார்க்.

ஆட்­டத்­தின் 38வது நிமி­டத்­தில் மிக்­கேல் டாக்ஸ்­காட் போட்ட கோல் மூலம் முன்­ன­ணிக்­குச் சென்­றது டென்­மார்க்.

பின்­னர் ஆட்­டத்­தின் 59வது நிமி­டத்­தில் தமது கோல் முனை­யில் டென்­மார்க் ஆட்­டக்­கா­ர­ரான யுசுஃப் போல்­சன் இருப்­ப­தைக் கவ­னிக்­கா­மல் ரஷ்­யா­வின் தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் பந்தை தமது கோல் காப்­பா­ள­ருக்கு அனுப்ப, அதை இடை­ம­றித்த போல்­சன் டென்­மார்க்­கின் இரண்­டா­வது கோலைப் போட்­டார்.

70வது நிமி­டத்­தில் ரஷ்­யா­வுக்­குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பு அர்ட்­யோம் ஸூபா கோல் போட்டு கோல் கணக்கை 2-1 என்று குறைத்­தார்.

ஆட்­டத்­தின் 79வது நிமி­டத்­தில் ஆண்ட்­ரெஸ் கிறிஸ்­டி­யன்­ச­னும் 82வது நிமி­டத்­தில் ஜோக்­கிம் மஹ்­லே­யும் தலா ஒரு கோல் போட்டு டென்­மார்க்­கின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தி­னர்.

அடுத்த சுற்­றில் டென்­மார்க் வேல்ஸ் குழு­வு­டன் வரும் 26ஆம் தேதி பொரு­தும்.

'பி' பிரி­வின் மற்­றோர் ஆட்­டத்­தில் பெல்­ஜி­யம் 2-0 என்ற கோல் கணக்­கில் பின்­லாந்­தைத் தோற்­க­டித்து, பி பிரிவு பட்­டி­ய­லில் முதல் இடத்­தைப் பிடித்­தது.

ஆட்­டத்­தின் 74வது நிமி­டத்­தில் பின்­லாந்­தின் லுக்­காஸ் ஹிரா­டெக்கி சொந்த வலைக்­குள் போட்ட ஒரு கோல் மற்­றும் 81வது நிமி­டத்­தில் ரோமெலு லுக்­காக்கு போட்ட ஒரு கோலு­டன் பெல்­ஜி­யம் வெற்றி பெற்­றது.

அடுத்த சுற்­றில் மற்ற பிரி­வு­களில் மூன்­றாம் இடத்­தைப் பெற்ற சிறந்த குழுக்­களில் ஒன்­று­டன் பெல்­ஜி­யம் வரும் 27ஆம் தேதி போட்­டி­யி­டும்.

'சி' பிரிவு ஆட்­டம் ஒன்­றில் நெதர்­லாந்து 3-0 என்ற கோல் கணக்­கில் நார்த் மெசி­டோ­னி­யாவை வென்று பட்­டி­ய­லில் முதல் இடத்­தைப் பிடித்­தது.

நெதர்­லாந்து சார்­பில் மெம்­பிஸ் டிபாய் ஒரு கோலும் அணித் தலை­வர் ஜியோ­ஜி­னியோ வைனல்ட்­ரம் இரண்டு கோல்­களும் போட்­ட­னர்.

அடுத்த சுற்­றில் நெதர்­லாந்து 'டி', 'இ', 'எஃப்' பிரி­வு­களில் மூன்­றாம் இடத்தைப் பிடித்த குழுக்­களில் ஒன்­று­டன் பொரு­தும்.

'சி' பிரிவின் மற்­றோர் ஆட்­டத்­தில் ஆஸ்­தி­ரியா 1-0 என்ற கோல் கணக்­கில் உக்­ரே­னைத் தோற்­க­டித்து அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­யது.

அடுத்த சுற்­றில் ஆஸ்­தி­ரியா பலம் வாய்ந்த இத்­தா­லி­யைச் சந்­திக்­கும்.

நார்த் மெசி­டோ­னி­யாவை வெற்றி கண்டு மூன்று புள்­ளி­களைப் பெற்று, 'சி' பிரி­வில் மூன்­றாம் இடத்­தில் உள்ள உக்­ரேன், தங்கள் பிரிவுகளில் மூன்றாம் நிலையில் உள்ள சிறந்த நான்கு குழுக்­களில் ஒன்­றா­க அடுத்த சுற்றுக்குத் தேர்வு பெறுமா என்று பொருத்­தி­ருந்து பார்க்க வேண்­டும்.