பாரிஸ்: பூமியை வெப்பமாக்கும் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தாலும் அடுத்த பத்தாண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் உலக வாழ்க்கை முறை அடிப்படையே மாறிவிடும் என ஐநாவின் பருவநிலை ஆலோசகர் குழு கூறியுள்ளது.
உலக உயிரினங்கள் அழிவது, பரவலாக மேலும் பல நோய்கள் உருவாவது, சுற்றுச்சூழல் சீரழிவது, கடல்நீர் மட்டம் உயர்வால் நகரங்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது உள்ளிட்ட மாபெரும் பாதிப்புகள் இப்பொழுது பிறக்கும் ஒரு குழந்தை 30 வயதை எட்டுவதற்கு முன்பே தெரியவரும் என்று ஐநா குழு அறிக்கை தெரிவிப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
வரும் காலத்தில் உயிரினம் தழைத்தோங்கப்போகிறதா இல்லை, சாதாரணமாக உயிர்வாழ மட்டுமே முடியுமா என உலகின் தலையாய சமூகங்கள் முடிவு செய்ய வேண்டியுள்ளதாக பல அரசாங்கங்கள் கூடி அமைத்த குழு தெரிவித்தது. இதில் உலகம் அபாயக் கட்டங்களை எட்டியுள்ளதாகத் தெரி விக்கும் அந்த அறிக்கை, காலம்காலமாக கட்டுப்படுத்தாமல் கரியமில வாயு வெளிேயற்றம் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் இதன் பாதிப்புகளை அண்மைய காலத்தில் தவிர்ப்பது முடியாத காரியம் என்றும் அது தெளிவுபடுத்தியது.
"நம்மைவிட நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையை அதிகம் பாதிக்கும் காலம் இனி வரவிருக்கிறது," என்று அந்த அறிக்கை சொன்னது.
பருவநிலை மாற்றம் உலகை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை முழுமையாக விளக்கும் அந்த 4,000 பக்க அறிக்கை, மனித இனம் பூமியை எந்த அளவுக்கு மோசமாக வழிநடத்திச் சென்றுள்ளது என்பதற்கு ஆதாரமாக அறிக்கை அமைந்துள்ளது.
உலக வெப்பமயமாதல் 19ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இருந்த வெப்பநிலையைவிட 2% செல்சியல் அதிகமாக இருந்தால் உலகம் பாதுகாக்கப்பட போதுமானது என விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் பத்தாண்டுகளுக்கு முன் 2015ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற கிட்டத்தட்ட 200 நாடுகள் உலக வெப்பமயமாதலை 2% செல்சியஸுக்கும் குறைவாகவோ அல் லது 1.5%க்கு மேல் அதிகரிக்காமல் இருக்க உறுதி கூறினர். ஆனால், தற்போது எப்படி பார்த்தாலும் ஆகக் குறைவாக 3% செல்சியஸுக்கு குறையாமல் வெப்ப நிலை அதி கரிக்கும் என்று அறிக்கை எச்சரித்து உள்ளது.

