'பருவநிலை மாற்றத்தால் வாழ்க்கை முறை மாறும்'

'பருவநிலை மாற்றத்தால் வாழ்க்கை முறை மாறும்'

2 mins read
e490a649-8850-40db-8c76-62c691ea75bf
-

பாரிஸ்: பூமியை வெப்­ப­மாக்­கும் வாயு வெளி­யேற்­றத்தைக் குறைத்­தா­லும் அடுத்த பத்­தாண்­டு­களில் பரு­வ­நிலை மாற்­றத்­தால் உலக வாழ்க்கை முறை அடிப்­ப­டையே மா­றி­வி­டும் என ஐநா­வின் பரு­வ­நிலை ஆலோ­ச­கர் குழு கூறி­யுள்­ளது.

உலக உயி­ரி­னங்­கள் அழி­வது, பர­வ­லாக மேலும் பல நோய்­கள் உரு­வா­வது, சுற்­றுச்­சூ­ழல் சீர­ழி­வது, கடல்­நீர் மட்­டம் உயர்­வால் நக­ரங்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்பு என்பது உள்­ளிட்ட மாபெ­ரும் பாதிப்­பு­கள் இப்­பொ­ழுது பிறக்­கும் ஒரு குழந்தை 30 வயதை எட்­டு­வ­தற்கு முன்பே தெரி­ய­வ­ரும் என்று ஐநா குழு அறிக்கை தெரி­விப்­ப­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னம் குறிப்­பிட்­டது.

வரும் காலத்­தில் உயி­ரி­னம் தழைத்­தோங்­கப்போகி­றதா இல்லை, சாதா­ர­ண­மாக உயிர்­வாழ மட்­டுமே முடி­யுமா என உல­கின் தலை­யாய சமூ­கங்­கள் முடிவு செய்ய வேண்­டி­யுள்­ள­தாக பல அர­சாங்­கங்­கள் கூடி அமைத்த குழு தெரி­வித்­தது. இதில் உல­கம் அபா­யக் கட்­டங்­களை எட்­டி­யுள்­ள­தா­கத் தெரி­ விக்­கும் அந்த அறிக்கை, காலம்­கா­ல­மாக கட்­டுப்­ப­டுத்­தா­மல் கரி­ய­மில வாயு வெளிேயற்­றம் தொடர்ந்து நடை­பெற்று வந்­ததால் இதன் பாதிப்­பு­களை அண்­மைய காலத்­தில் தவிர்ப்­பது முடி­யாத காரி­யம் என்­றும் அது தெளி­வு­ப­டுத்தியது.

"நம்­மை­விட நமது பிள்­ளை­கள், பேரப்­பிள்­ளை­க­ளின் வாழ்க்­கையை அதி­கம் பாதிக்­கும் காலம் இனி வர­வி­ருக்­கிறது," என்று அந்த அறிக்கை சொன்­னது.

பரு­வ­நிலை மாற்­றம் உலகை எந்த அள­வுக்குப் பாதித்­துள்­ளது என்­பதை முழு­மை­யாக விளக்­கும் அந்த 4,000 பக்க அறிக்கை, மனித இனம் பூமியை எந்த அள­வுக்கு மோச­மாக வழி­ந­டத்­திச் சென்­றுள்­ளது என்­ப­தற்கு ஆதா­ர­மாக அறிக்கை அமைந்­துள்­ளது.

உலக வெப்­ப­ம­ய­மா­தல் 19ஆம் நூற்­றாண்­டின் மத்­திய பகு­தி­யில் இருந்த வெப்­ப­நி­லை­யை­விட 2% செல்­சி­யல் அதி­க­மாக இருந்­தால் உல­கம் பாது­காக்­கப்­பட போது­மா­னது என விஞ்­ஞா­னி­கள் கூறி­யி­ருந்­த­னர். இந்­நி­லை­யில் பத்­தாண்­டு­க­ளுக்கு முன் 2015ஆம் ஆண்டு பாரிஸ் பரு­வ­நிலை மாநாட்­டில் பங்­கேற்ற கிட்­டத்­தட்ட 200 நாடு­கள் உலக வெப்­ப­ம­ய­மா­தலை 2% செல்­சி­ய­ஸுக்­கும் குறை­வா­கவோ அல் லது 1.5%க்கு மேல் அதி­க­ரிக்­கா­மல் இருக்­க உறுதி கூறி­னர். ஆனால், தற்போது எப்படி பார்த்தாலும் ஆகக் குறைவாக 3% செல்சியஸுக்கு குறையாமல் வெப்ப நிலை அதி கரிக்கும் என்று அறிக்கை எச்சரித்து உள்ளது.