தேசிய பாதுகாப்பு; முதல் வழக்கு

தேசிய பாதுகாப்பு; முதல் வழக்கு

1 mins read
90e56168-e5f6-4515-9387-3bf4af0787af
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் பெய்­ஜிங் அறி­மு­கப்­ப­டுத்­திய தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தின் முதல் வழக்கு விசா­ரணை நேற்று தொடங்­கி­யது. டோங் யிங்-கிட் என்­ப­வர் மீதான வழக்கை தலைமை நிர்­வாகி கேரி லாமால் நிய­மிக்­கப்­பட்ட மூவர் அடங்­கிய உயர்­நீ­தி­மன்­றம் விசா­ரித்­தது. ஓராண்­டு­கா­ல­மாக பிணை­யின்றி சிறை­யில் அடைக்­கப்­பட்ட 24 வயது டோங் தம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை மறுத்துள்ளார். ஆர்ப்­பாட்­டத்­தின்­போது பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் எதி­லும் ஈடு­ப­ட­வில்லை என்­றும் பிரி­வி­னையைத் தூண்­டும் விதத்­தில் நடக்­க­வில்லை என்­றும் அவர் கூறி­னார். இந்த வழக்கு விசா­ரணை அடுத்த 15 நாட்­க­ளுக்கு நீடிக்கும் என எதிர்­பார்க்­கப் படுகிறது. வழக்­கின் ஆரம்­பத்­தில் யாரோ புகைப்­ப­டம் எடுத்­த­தா­கக் கூறிய நீதி­ப­தி­களில் ஒரு­வ­ரான எஸ்­டர் டோ இது குறித்து போலி­சி­டம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி­னார். அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, கனடா, நியூ­சி­லாந்து, பிரிட்­டன் உள்­ளிட்ட நாடு­க­ளின் பிர­தி­நி­தி­கள், பொது­மக்­கள் விசா­ர­ணையை நேரில் பார்வையிட்டனர்.

இதற்கிடையே ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ள ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் கட்டுரையாளரை போலிசார் கைது செய்துள்ளனர். சீனாவைப் பற்றி லி பிங் என்ற பெயரில் 55 வயது யாங் சிங் சீ வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சதியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஊழியர்கள் கைது செய்யப்பட்ட தால் ஆப்பிள் டெய்லி இன்று மூடப் படவிருக்கிறது.