யூரோ காற்பந்துப் போட்டியின் 'டி' பிரிவு குரூப் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. அதில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு குழுவை வீழ்த்தி குரூப் 'டி' பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டத் தின் ஒரே கோலை இதுவரையில் சிறப்பாக விளையாடி வரும் இங்கி லாந்தின் முன்னணி ஆட்டக்காரர் ரஹீம் ஸ்டெர்லிங் முதல் பாதியில் புகுத்தினார். 16 குழுக்கள் பங் ேகற்கும் அடுத்த சுற்றில் அது காற் பந்து ஜாம்பவான்களான பிரான்ஸ், ஜெர்மனி அல்லது போர்ச்சுகல் குழுக்களைச் சந்திக்கக் கூடும். மற்றொரு 'டி' பிரிவு ஆட்டத்தில் குரோவேஷியா அணி ஸ்காட்லாந்து அணியுடன் பொரு தியது. அதில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோவேஷியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பட்டியலில் 2வது இடத் தில் உள்ள குரோவேஷியா அணி போட்டியின் அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்துடன் முன்னேறுகிறது.
யூரோ: முன்னேறும் இங்கிலாந்து, குரோவேஷியா
1 mins read
-

