ஆப்பிள் டெய்லிக்கு பிரியாவிடை

ஆப்பிள் டெய்லிக்கு பிரியாவிடை

2 mins read
44fd924e-471a-4385-9141-c423f69138f4
ஆப்பிள் டெய்லியின் செய்தியாளர் ஒருவர், வாசகர்களுக்கு கடைசி இதழைக் காட்டுகிறார். படம்: ஏஎஃப்பி -

ஹாங்­காங்: ஹாங்­காங் நிர்­வா­கத்­தின் அடுத்­த­டுத்த நெருக்­க­டி­யால் திக்­கு­முக்­கா­டிய ஆப்­பிள் டெய்லி நாளிதழ் 26 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நேற்று கதவை மூடியது.

புதன்­கி­ழமை இர­வி­லி­ருந்தே ஆயி­ரக்­க­ணக்­கான வாச­கர்­கள் கடைசி இதழை வாங்­கு­வ­தற்­காக அலு­வ­ல­கத்­தின் முன்பு கூடி­னர்.

கைபேசி விளக்கை ஒளி­ர­விட்டு ஆப்­பிள் டெய்­லிக்கு தங்­க­ளு­டைய ஆத­ரவை அவர்­கள் வெளிப்­ப­டுத்­தி­னர்.

கடைசி இதழ், சுமார் ஒரு மில்­லி­யன் பிர­தி­கள் அச்­ச­டிக்­கப்­பட்­டன. முதல் பக்­கத்­தில் ஆத­ர­வா­ளர்­களை நோக்கி ஆப்­பிள் டெய்லி ஊழி­யர் ஒரு­வர் கைபே­சி­யைக் காட்டி அசைக்­கும் படம் இடம்­பெற்று இ­ருந்­தது.

வாச­கர்­க­ளின் எதிர்­பார்ப்பை பூர்த்தி செய்ய முடி­யா­த­தால் மன்­னிப்­புக் கேட்­டுக்கொள்­வ­தா­க­வும் ஆப்­பிள் டெய்லி அறி­வித்­தது.

அந்நாளிதழின் முன்­னாள் இணை வெளி­யீட்­டா­ள­ரான சான் புய் மேன், ஊழி­யர்­க­ளின் பாது­காப்பு, மனி­த­வள பிரச்­சி­னை­கள் கார­ண­மாக இந்த வேத­னை­யான முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக நேற்று வெளி­யி­டப்­பட்ட குறிப்­பில் தெரி­வித்­தி­ருந்­தார்.

கடந்த வாரம் போலி­சா­ரால் கைது செய்­யப்­பட்ட ஆப்­பிள் டெய்லியின்­ முக்கிய புள்ளிகளில் சானும் ஒரு­வர்.

அந்­த நாளிதழின் தீவிர ஆத­ர­வா­ள­ரான சான் டிசாங், ஒரு சகாப்­தமே முடிந்­து­விட்­டது என்­றார்.

"ஒரு நாளேட்­டைக்­கூட ஏன் ஹாங்­காங்­கால் சகித்­துக்­கொள்ள முடி­ய­வில்லை என்­பது எனக்­குப் புரி­ய­வில்லை," என்­றும் அவர் வினவினார்.

கடந்த வாரம் ஆப்பிள் டெய்லி ­அ­லுவல­கத்­தில் அதி­ர­டி­யாக நுழைந்த நூற்­றுக்­க­ணக்­கான போலி­சார், தேசிய பாது­காப்­புச் சட்­டத்தை மீறும் கட்­டு­ரை­கள் வெளி­யி­டப்­பட்­ட­தா­கக் கூறி சோதனை நடத்­தி­னர்.

முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரை களில் சீனா, ஹாங்­காங்­குக்கு எதி­ராக தடை­களை விதிக்க வேண்­டும் என்று பல நாடு­க­ளைக் கேட்டுக் கொள்ளும் வகையில் இருந்தது என்று அர­சாங்­கத்­தின் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தக் குற்­றச்­சாட்­டின் பேரில் ஆப்­பிள் டெய்லி நாளேட்டின் சொத்­து­கள், வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டன. மூத்த ஊழி­யர்­கள் பலர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

ஏற்­கெ­னவே தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்ள ஆப்­பிள் டெய்­லி­யின் நிறு­வ­னர் ஜிம்மி லாய், தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் குற்­றச்­சாட்டு­களை எதிர்­நோக்­கு­கி­றார்.

இதற்கிடையே தைவானில் ஆப்பிள் டெய்லி நாளேடு தொடர்ந்து வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.