கொவிட்-19 மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு; நோயாளி பலி

கொவிட்-19 மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு; நோயாளி பலி

1 mins read
dbfa19e3-7c6c-4bc7-bc09-a2b3cadffd59
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் கொவிட்-19 நோயா­ளி­கள் சிகிச்சை பெறும் மருத்­து­வ­ம­னை­யில் முன்­னாள் ராணுவ வீரர் ஒரு­வர் சுட்­ட­தால் நோயாளி ஒரு­வர் கொல்­லப்­பட்­டார். இதற்கு முன்பு கடை­யில் இருந்த ஒரு­வ­ரை­யும் அவர் சுட்­டுக் கொன்ற­ தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பேங்­காக்­குக்கு அருகே பாதும் தானி தற்­கா­லிக மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கும் நோயா­ளி­கள் அனை­ வ­ரும் போதைப் புழங்­கி­கள் என்று நம்பி 23 வயது சந்­தேக நபர் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தாக வட்­டார போலிஸ் தலை­வர் அம்­போல் புவா­ராப்­போர்ன் தெரி­வித்­தார். தற்­கா­லிக மருத்­து­வ­மனை அமைக்­கப்­பட்ட இடத்­தில் முன்பு மறு­வாழ்வு இல்­ல­மாக இருந்தது. சந்­தேக நபரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே பேங்­காக்­கில் நேற்று ராணுவ அர­சாங்­கத்­துக்கு எதி­ராக நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். கிரு­மிப் பர­வ­லால் பாதிக்­கப்­ப­ட­லாம் என்ற அதி­கா­ரி­க­ளின் எச்­ச­ரிக்­கை­யை­யும் மீறி பேரணி நடைபெற்றது.

பிர­த­மர் பிர­யுத் சான் ஓ பத­வி­யேற்­ற­தி­லி­ருந்து பேங்­காக்­கில் அடிக்­கடி ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன. 2014 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு முன்னாள் ராணுவத் தலைவரான பிரயுத் சான் ஓ ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து உள்ளார்.