காற்பந்து: புதிய சாதனை படைத்தார் ரொனால்டோ

காற்பந்து: புதிய சாதனை படைத்தார் ரொனால்டோ

1 mins read
c04d24fe-2b04-46c6-bb74-d1d0da74988e
-

யூரோ 2020 'எஃப்' பிரிவு காற்­பந்து ஆட்­டத்­தில் நேற்று போர்ச்­சு­கல் நட்­சத்­தி­ரம் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ இரு முறை கோல் அடித்து புதிய சாத­னையை நிகழ்த்­தி­னார். முன்­னாள் ஈரா­னிய ஆட்­டக்­கா­ரர் அலி டாயி 109 கோல்­க­ளு­டன் ஆக அதிக அனைத்­து­லக கோல்­க­ளைப் புகுத்­திய சாத­னை­யா­ளர். நேற்­றைய ஆட்­டத்­தில் ரொனால்டோ அடித்த கோல்­கள் மூலம் தாமும் அச்­சா­த­னைக்கு ஈடாக 109 அனைத்­து­லக கோல்­இலக்கை அடைந்­து­விட்­டார்.

யூரோ 2020 காற்­பந்­துப் போட்­டி­யின் ஓர் ஆட்­டத்­தில் போர்ச்­சு­கல் 2-2 என்ற கோல் கணக்­கில் பிரான்­ஸு­டன் சம­நிலை கண்டு போட்­டி­யின் அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­யது. மற்­றோர் 'எஃப்' பிரிவு ஆட்­டத்­தில் ஜெர்­ம­னி­யும் ஹங்­கே­ரி­யும் தரப்­புக்கு இரண்டு கோல் போட்டு ஆட்­டத்­தை சம­நி­லை­யில் முடித்­துக் ­கொண்­டன.

'எஃப்' பிரி­வி­லி­ருந்து ஜெர்­மனி, பிரான்ஸ், போர்ச்­சு­கல் ஆகிய மூன்று காற்­பந்து ஜாம்­ப­வான்­களும் போட்­டி­யின் அடுத்த சுற்­றுக்கு தகுதி பெறு­கின்­றன.

நேற்று நடை­பெற்ற 'இ' பிரிவு ஆட்­டம் ஒன்­றில், ஸ்பெ­யின் 5-0 என்ற கோல் கணக்­கில் ஸ்லோ­வாக்­கி­யாவை வீழ்த்தி அபார வெற்றி கண்­டது.

மற்­றோர் 'இ' பிரிவு ஆட்­டத்­தில், சுவீ­டன் 3-2 என்ற கோல் கணக்­கில் போலந்தை வென்­றது.

'இ' பிரி­வி­லி­ருந்து சுவீ­ட­னும் ஸ்பெ­யி­னும் போட்­டி­யின் அடுத்த சுற்­றுக்கு முன்­னே­று­கின்­றன.