செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
30bba8ab-dbcc-45a2-b1a7-4f631f6c687a
-

முன்னாள் அதிபர் மரணம்

மணிலா: பிலிப்பீன்ஸ் மக்களால் அதிகம் விரும்பப்படும் முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்கினோ நேற்று காலை 61 வயதில் காலமானார். முன்னாள் அதிபர் கரோஸான் அக்கினோவின் மகனான இவர், 2010 முதல் 2016 வரையில் அதிபராக இருந்தார். பிலிப்பீன்சை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றதில் இவருக்கு முக்கியப்பங்குள்ளது.

அரிதாக இதய வீக்கம் ஏற்படலாம்

வாஷிங்டன்: அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம், ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசியால் மிக அரிதாக இளம் வயதினருக்கு இதய வீக்கம் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி தடுப்பூசி போடுவதால் பலன்களே அதிகம் என்று அது கூறியுள்ளது.