கொரோன கிருமி 2019 அக்டோபரிலேயே சீனாவில் தோன்றியிருக்கலாம்

கொரோன கிருமி 2019 அக்டோபரிலேயே சீனாவில் தோன்றியிருக்கலாம்

2 mins read
9b4a1852-dcdd-496d-a563-305cf408d0b3
(படம்: ஏஎப்பி) -

ஷங்காய்: கொவிட்-19 கொள்ளைநோய்க்கு காரணமான கிருமி 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே சீனாவில் பரவத் தொடங்கியிருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது சீனாவின் வூஹான் நகரில் அடையாளம் காணப்பட்ட முதல் கிருமித்தொற்று சம்பவத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முந்தியது என்பது நினைவுகூரத்தக்கது. பிரிட்டனின் கெண்ட் பல்கலைக்கழகத்தைச் ேசர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் இவ்வாறு கூறுகின்றனர். சார்ஸ் கொவ்-2 என்ற வகையான முன்னோடிக் கிருமி அநேகமாக 2019ஆம் ஆண்டு அக்டோபர் இறுதி, அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில கண்டறியப்பட்டதாகவும் இதையடுத்து ஜனவரி 2020ஆம் ஆண்டு உலக அளவில் பரவிட்டதாகவும் ஆய்வு கணித்துள்ளது.

சீனாவின் அதிகாரபூர்வ தகவலின்படி, ெகாவிட்-19 கொள்ளைநோய் வூஹான் நகரின் ஹுவானான் கடல் உணவு சந்தையில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரியவந்தது. எனினும், இதற்கு முந்திய சில தொற்று சம்பவங்களுக்கும் வூஹானுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறப்படுவதால் இந்தக் கிருமி வூஹான் சந்தைக்கு வரும் முன்னரே பரவத் தொடங்கிவிட்டதை கோடி காட்டுகிறது.

இதன் தொடர்பில் சீனாவும் உலக சுகாதார நிறுவனமும் மார்ச் மாதம் கூட்டாக வெளியிட்ட ஆய்வு ஒன்று வூஹானில் கிருமிப் பரவல் ஏற்படும் முன்னரே அங்கும் இங்குமாக சீனாவில் பல இடங்களில் மனிதர்களைத் தொற்றியிருக்கலாம் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஃபிரட் ஹட்சின்சன் என்ற புற்றுநோய் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஜெஸ்ஸி புளூம் என்பவர் சீான ஆரம்பகால கொவிட் கிருமித்தொற்று குறித்த தகவல்களை அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதில் ஹுவானான் சந்தை கிருமி மாதிரிகள் சார்ஸ் ெகாவ்-2 கிருமியை முழுமையாக ஒட்டியது இல்லை என்றும், அவை முன்னரே பரவத் தொடங்விட்ட கிருமி ஒன்றின் உருமாற்றம் என்றும் விளக்கப்பட்டுள்ளது.