மருத்துவ வசதிகளை பெருக்கிய இந்தோனீசியா

மருத்துவ வசதிகளை பெருக்கிய இந்தோனீசியா

2 mins read
0804d7d6-bdea-4041-aa54-ba5286f66edd
-

ஜகார்த்தா: இந்­தோ­னீசி­யா­வில் கொவிட்-19 டெல்டா வகைத் தொற்று பெருகிவரு­வ­தைத் தொடர்ந்து, கூடு­தல் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் மருத்­து­வப் படுக்­கை­க­ளுக்­கும் ஏற்­பாடு செய்­யப்பட்டுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்­கம் கூறி­யுள்­ளது.

சுகா­தார அமைச்­சர் புடி குணாடி சடிக்­கின் நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் இத­னைத் தெரி­வித்­தார். ஜ­கார்த்­தா­வின் முக்­கி­ய மூன்று அரசாங்க மருத்­து­வ­ம­னை­கள் கொவிட்-19 கிரு­மிக்கு சிகிச்சை அளிக்­கும் மருத்­து­வ­ மனைகளாக மாற்­றப்­படும் என்று அவர் கூறி­னார்.

மேலும், தலை­ந­க­ரில் அர­சாங்­கம் புதி­தா­கக் கட்­டி­யி­ருக்­கும் இரண்டு, பெரிய குடி­யி­ருப்பு வளா­கங்­கள், மெல்­லிய நோய் அறி­குறி உள்­ள­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­காக மருத்­துவ வளா­கங்­க­ளாக மாற்­றப்­படும் என்­றார் அமைச்­சர்.

மூன்று அர­சாங்க மருத்­து­வ­ மனை­களும் கொவிட்-19 சிகிச்சை வச­தி­க­ளாக மாற்­றப்­ப­டு­வ­தால் நூற்­றுக்­க­ணக்­கான மருத்­து­வப் படுக்­கை­கள், அனைத்­து­வித சாத­னங்­கள், அனு­ப­வம் வாய்ந்த மருத்­து­வக் குழு, ஆகி­யவை கிடைக்­கும் என்று திரு புடி குறிப்­பிட்­டார்.

அத்­து­டன், மருத்­து­வ­ம­னை­களில் உள்ள அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­கள் கொவிட்-19 சிகிச்­சைக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவ­சர சிகிச்சை மருத்து­வ­ம­னை ­க­ளுக்கு வெளியே அமைக்­கப்­படும் கூடா­ரங்­களில் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் அவர் சொன்­னார்

தற்­போது இந்­தோ­னீ­சியா முழு­வ­தும் 85 ஆயி­ரம் படுக்­கை­கள் கிருமித் தொற்று கண்­ட­வர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­ட­தா­க­வும் அவற்­றில் 60,000 படுக்­கை­களில் ஆட்­கள் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் திரு புடி தெரி­வித்­தார்.

இந்­தோ­னீ­சி­யா­வில் கடந்த திங்­கட்­கி­ழமை வரை 2 மில்­லி­யன் பேருக்கு கிரு­மித்­தொற்று கண்­டுள்­ளது. இந்த வாரத்­தில் மூன்று நாள்­களில் முன் எப்­போ­தும் இல்­லாத அள­வை தொற்று தொட்டது.

நேற்று முன்­தி­னம் அங்கு புதி­தாக 20,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.