இஸ்ரேல்: முகக் கவசம் தேவை

1 mins read
f752ae79-9d2d-43b9-a265-d3b6ee87f44b
-

ஜெரூ­ச­லம்: இஸ்­ரேல், அதன் குடி­மக்­கள் கட்டடங்களுக்குள் இனி முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லை என்று கூறிய பத்து நாட்­களில் மீண்­டும் அந்த விதி­ முறையை நடப்­புக்­குக் கொண்டு வந்­துள்­ளது. அங்கு டெல்டா வகைக் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து இஸ்­ரே­லிய அர­சாங்­கம் அதனை அறி­வித்­தது.

இஸ்­ரே­லில் தடுப்­பூசி போடும் இயக்­கம் துரி­த­மாக நடை­பெற்று வந்­த­தால் அது கொவிட்-19 கிருமி தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளைத் தளர்த்தியது.

ஆனால் இரண்டு பள்­ளி­களில் டெல்டா வகை கிருமி பர­வி­ய­தன் காரணமாக, கடந்த வாரத்­தில் அங்­குள்ள தொற்­றுச் சம்­ப­வங்­கள் 138ஆக உயர்ந்­தன.

அத­னால் வீட்­டைத் தவிர வேறு எல்லா கட்­ட­டங்­க­ளி­லும் முகக் கவ­சம் கட்­டா­யம் என்று சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது.