புத்ரராஜெயா: மலேசியா கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறும் வர்த்தகங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் எதிராக கடும் சோதனை களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருக்கிறது. உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுதின் இதனை நேற்று அறிவித்தார்.
பொதுமுடக்கம் நடப்பில் இருந்தபோதும் நிறுவனங்களை அவர் எச்சரித்தார். ஆனால் இரண்டு மாத முடக்கத்தால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகங்கள் குறைபட்டு வருகின்றன.
இவ்வேளையில் தற்போதைய கொவிட்-19 பரவலில் இளையர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் வீட்டிலிருந்து வெளியேறி வேறு இடங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி குடும்பத்தார் அவர்களிடம் கேட்டு வருவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்தது.

