மயாமி கட்டட இடிபாடுகளில் மீட்புப் பணி

மயாமி கட்டட இடிபாடுகளில் மீட்புப் பணி

1 mins read
ca0e2587-71a3-4881-943a-72732af05c99
கடலோர வட்டாரத்தில் இருக்கும் கட்டடம், 1990களிலிருந்து தரைக்குள் இறங்கி வருவதாக ஃபுளோரிடா அனைத்துலக பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வு கூறியது. அது கட்டடப் பாதுகாப்பை பாதித்திருக்கலாம் என்று கூறப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

மயாமி: மயா­மி­யில் கடந்த வியா­ழன் அன்று 12 மாடி கொண்டோ வீட்­டுக் கட்­ட­டத்­தின் ஒரு பகுதி இடிந்து விழுந்­த­தைத் தொடர்ந்து மீட்­புப் பணி­யா­ளர்­கள் உயிர்­பி­ழைத்­த­வர்­களை அவ­ச­ர­மா­கத் தேடி வரு­கின்­ற­னர். குறைந்­தது மூன்று பேர் அச்­சம்­ப­வத்­தில் உயிர் இழந்­த­தா­கக் கரு­தப்­ப­ப­டு­கிறது. மேலும் 99 பேரை இன்­னும் காண­வில்லை. மாண்­டோர் எண்­ணிக்கை வெகு­வாக உய­ரலாம் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

இது­வரை 35 பேரை தீய­ணைப்பு அதி­கா­ரி­கள் காப்­பாற்­றி­யுள்­ள­னர்.

கட்­ட­டத்­தின் அடித்­த­ளத்­தில் உள்ள கார் நிறுத்­து­மி­டத்­தில் புகுந்து ஒவ்­வொரு மாடி­யி­லும் சிக்கி­யி­ருப்­போரை நேற்று மீட்­புப் பணி­யா­ளர்­கள் தேடி வந்­த­னர். சில­ரு­டன் பேச முடிந்­த­தா­க­வும் அவர்­ க­ளைக் காப்­பாற்ற வழி­கண்டு வரு­வ­தா­க­வும் ஃபுளோ­ரிடா மாநில ஆளு­நர் ரான் டிசாண்­டிஸ் கூறி­னார். ஆனால் கட்­டட இடி­பா­டு­கள் நிலை­யற்று இருப்­ப­தால் அப்­பணி மெது­வாக நடை­பெற்று வரு­கிறது.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்­ட­டத்­தில் 136 வீடுகள் இருந்தன. அவற்றில் பாதி இடிந்து விழுந்­தன. அவை இடிந்து விழுந்தது "எறி ­ப­டைத் தாக்­கி­யது போல இருந்­தது" என்று உயிர் தப்­பி­ய­வர்­கள் கூறி­னர்.

அச்­சம்­ப­வத்­தால் புளோ­ரிடாவில் நெருக்­கடி நிலையை அறி­வித்­து, மத்­திய அர­சாங்­கத்­தின் உத­விக்­கும் உத்­த­ர­விட்­டுள்ளார் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன்.