மாண்டலே அருகே லாரி நிறைய ஆயுதங்கள்: மியன். ராணுவம்

மாண்டலே அருகே லாரி நிறைய ஆயுதங்கள்: மியன். ராணுவம்

1 mins read
eedadbea-4e15-4f0f-8e5f-a05646ce7c34
-

யங்­கூன்: மியன்­மா­ரின் இரண்­டா­வது ஆகப் பெரிய நக­ர­மான மாண்டலேயில் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளு­டன் நடந்த துப்­பாக்­கிச் சண்­டைக்­குப் பிறகு அந்­நாட்டு ராணு­வம் லாரி நிறைய ஆயு­தங்­க­ளைக் கைப்­பற்­றி­ய­தாக உள்­ளூர் செய்தி நிறு­வ­னம் கூறி­யது.

பிப்­ர­வரி முதல் தேதி திரு­வாட்டி ஆங் சான் சூச்­சி­யின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தைக் கவிழ்த்த இரா­ணுவம் நூற்­றுக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­க­ரர்­களை கைது செய்­த­து­டன், எதிர்ப்­ப­வர்களைக் கொன்றம் ஒடுக்கியும் வரு­கிறது. அதற்கு பதி­லாக, ஆட்­சிக் கவிழ்ப்பை எதிர்ப்­போர் கிளர்ச்­சிக் குழுக்­களை அமைத்து, சிறிய நக­ரங்­க­ளி­லும் கிரா­மங்­க­ளி­லும் சிறிய தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­ற­னர்.

புதி­தாக அமைக்­கப்­பட்ட மாண்டலே மக்­கள் தற்­காப்­புப் படை­யி­ன­ரு­டன் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை துப்­பாக்­கிச் சண்டை நடந்­த­தில் எட்டு கிளர்ச்­சி­யா­ளர்­கள் மாண்­ட­தா­க­வும் எட்­டுப் பேர் கைதா­ன­தா­க­வும் அர­சாங்­கத்­தின் மியன்­மா­ரின் உல­கப் புது ஒளி செய்­தித்­தாள் தெரிவித்தது.

மாண்டலே அருகே லாரி­யில் 100 துப்­பாக்­கி­கள், 10,000 குண்­டு­கள், 499 கையெறி குண்­டு­களை ராணு­வம் கைப்­பற்­றி­ய­தாக செய்­தித் தாள் கூறி­யது.

பிடி­பட்ட கிளர்ச்­சிக் குழு­வி­னர், கச்­சின் சுதந்­தி­ரப் படை­யி­னர் தங்­க­ளுக்கு பயிற்சி அளித்­த­னர் எனக் கூறி­ய­தா­க­வும் செய்தித்தாள் குறிப்பிட்டது.