கம்போடிய காட்டில் அரிய வகை மான்

கம்போடிய காட்டில் அரிய வகை மான்

1 mins read
9797ae95-8177-4c74-8514-dfb1139dc703
-
Google News Preferred Icon

மிகவும் அருகிவரும் ஒரு ராட்சத மான் வகை முதன்முறையாக கம்போடியாவில் காணப்பட்டுள்ளது. அந்நாட்டின் வடகிழக்கில் உள்ள ரத்னகிரி மாநிலத்தில் இருக்கும் வீராச்சேய் தேசிய பூங்காவில் கடந்த ஏப்ரலில் மான் புகைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் காட்டிலிருந்து புகைப்படக் கருவியை எடுத்துவர பல மாதங்கள் பிடித்தன. ராட்சத முந்த்ஜக் என அழைக்கப்படும் அவ்வகை மானின் தனித்துவம் அதன் நீள்கொம்புகள் ஆகும். ராட்சத முந்த்ஜக் மான் முதன்முதலில் 1994இல் வியட்னாம், லாவோஸ் நாடுகளின் வனப்பகுதிகளில் காணப்பட்டது. அனைத்துலக இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அதனை அருகி வரும் உயிரினங்களுக்கான தனது சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. படம்: ஏஎஃப்பி