தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தியோங் பாருவில் எங் வாட் ஸ்திரீட் குடியிருப்பாளர்களுக்கு பரிசோதனை தொடங்கியது

1 mins read
2133129b-d1b3-4b4f-b198-d384c93959e5
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தியோங் பாருவில் உள்ள ஒரு புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இன்று காலை முதல் கொவிட்-19 பரிசோதனை தொடங்கியது.

அங்குள்ள எங் வாட் ஸ்திரீட் புளோக் 66ன் குடியிருப்பாளர்களில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரிடம் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் மேலும் கிருமி தொற்றும் அபாயத்தைக் குறைக்க அங்கு பரிசோதனை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.

2D பூன் தியோங் ரோட்டில் உள்ள கூடத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிருமித்தொற்று பரிசோதனை நடைபெறும்.

இம்மாதம் 8ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை, எங் வாட் ஸ்திரீட் புளோக் 66க்குச் சென்ற வருகையாளர்களும் அதன் குடியிருப்பாளர்களுடன் கலந்துறவாடியவர்களும் கிருமித்தொற்று பரிசோதனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்